TNPSC Thervupettagam

இணைய பயன்பாட்டுத் தாக்குதல்கள் - இந்தியா

February 25 , 2018 2467 days 783 0
  • அண்மையில் வெளியிடப்பட்ட “அகாமாய் இணையப் பாதுகாப்பு நிலை Q4 2017”அறிக்கைப்படி (Akamai State of the Internet Security Q4 2017), இணைய பயன்பாட்டுத் தாக்குதல்கள் (Web Application Attacks- WAA) அதிகம் நடைபெற்ற நாடுகளின் பட்டியலில் இந்தியா ஏழாவது நாடாக பட்டியலிடப்பட்டுள்ளது.
  • இந்த அறிக்கைப்படி 2017ஆம் ஆண்டு இந்தியாவில் நடைபெற்ற 53,000 சைபர் தாக்குதல்களில் சுமார் 40 சதவீத தாக்குதல்கள் இந்தியாவின் நிதிச் சேவை துறையில் நடைபெற்றுள்ளது.
  • இந்த அறிக்கையானது இந்தியாவில் வேகமாக வளரும் துறையான வங்கி, நிதிச் சேவை மற்றும் காப்பீட்டுத் துறையை (Banking, Financial Service and Insurance) மையப்படுத்தி ரேன்சம்வேர் தாக்குதல், மென்பொருள் வைரஸ் தாக்குதல்கள், இணையவழி தகவல் திருடல்கள் (Phishing), இணையதள முடக்கம போன்ற இணைய தாக்குதல்கள் நடத்தப்படுவதாகக் கூறியுள்ளது.
  • அமெரிக்காவை தலைமையிடமாகக் கொண்ட கணிமை பாதுகாப்பு தீர்வை வழங்குநர் (cloud security solutions provider) நிறுவனமான அகாமாய் உலகின் மிகப்பெரிய மற்றும் மிகவும் நம்பகத்தகுந்த கணிமை வழங்குநர் மேடையாகும்.
  • அலை வரிசை இணைப்பு மற்றும் கணிமை பாதுகாப்பு போன்றவற்றின் மீது காலாண்டுக்கு ஒரு முறை அகாமாய் நிறுவனத்தால் இந்த அறிக்கை வெளியிடப்படுகின்றது.
  • இணைய தாக்குதலின் தோற்றம், அவற்றின் உத்திகள், வகைகள், இலக்குகள், அவற்றின் தாக்குதல்கள், அவற்றின் போக்குகள் போன்றவற்றை இந்த அறிக்கை விளக்குகின்றது.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்