தமிழ்நாடு மாநிலமானது, கடந்த இரண்டு ஆண்டுகளில் 3585.3 ஹெக்டேர் பரப்பளவில் 24 காப்புக்காடுகளை அறிவித்துள்ளது.
பசுமைத் தமிழ்நாடு திட்டத்தின் கீழ், 23.69 சதவீதமாக இருந்த மரம் மற்றும் காடுகளின் பரப்பினை 33 சதவீதமாக அதிகரிப்பதற்கு அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது.
மாநில அரசானது, 2021-2023 ஆம் ஆண்டில் திண்டுக்கல், தருமபுரி, மதுரை, நாமக்கல், நீலகிரி, கள்ளக்குறிச்சி, சிவகங்கை மற்றும் தேனி ஆகிய 8 மாவட்டங்களில் காப்புக் காடுகளை அறிவித்துள்ளது.
இவை 1882 ஆம் ஆண்டின் தமிழ்நாடு வனச்சட்டத்தின் 16வது சட்டப் பிரிவின் கீழ் அறிவிக்கப் பட்டுள்ளன.