20 கிலோ மீட்டர் நடைபயணத்தில் தேசியச் சாதனை
February 17 , 2021
1378 days
675
- பிரியங்கா கோஸ்சுவாமி அவர்கள் 20 கி.மீ. நடை பயணத்தில் ஒரு தேசியச் சாதனையை முறியடித்துள்ளார்.
- இவர் இச்சாதனையை 8வது ஓபன் தேசிய மற்றும் 4வது சர்வதேசப் பந்தய-நடை பயண சாம்பியன்ஷிப் போட்டியில் நிகழ்த்தினார்.
- இவர் 1 : 28 : 45 என்ற ஒரு கால அளவில் இலக்கைக் கடந்து அந்தச் சாதனையைப் படைத்து உள்ளார்.
- கடந்த ஆண்டில் இதே நிகழ்வில் பாவ்னா ஜாட் என்பவர் ஏற்படுத்திய 1 : 29 : 54 என்ற சாதனையை இவர் முறியடித்துள்ளார்.
- இதற்கு முன்பு பிரியங்கா 2017-18 ஆம் ஆண்டில் தேசிய அளவில் 2 வெள்ளிப் பதக்கங்களை வென்றுள்ளார்.
- மேலும் இவர் அகில இந்திய இரயில்வே போட்டியில் (2018) ஒரு தங்கப் பதக்கத்தையும் வென்றுள்ளார்.
- இவர் இத்தாலியில் (ரோம்) உலக நடை பயண சாம்பியன்ஷிப் மற்றும் ஜப்பானில் ஆசியான் நடைபயண சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்.
Post Views:
675