20 ஆண்டுகளில் இல்லாத அளவில் இந்தியாவின் மிக மோசமான வைப்புத் தொகை நெருக்கடி
April 21 , 2024 216 days 188 0
வீட்டுக் கடன்கள் மற்றும் நுகர்வுக்கான பிற கடன்கள் உள்ளிட்ட பல்வேறு வகைகளில் கடன் பெறுதல் அதிகரித்ததால், குறைந்த பட்சம் 20 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடன் மற்றும் வைப்புத் தொகை விகிதம் அதிகபட்சமாக உள்ளது.
தற்போதைய கடன் மற்றும் வைப்புத் தொகை விகிதம் ஆனது 80% ஆக உள்ளது என்ற நிலையில் இது 2015 ஆம் ஆண்டில் இருந்த அளவுகளை விட மிக அதிகமாக உள்ளது.
தற்போது வங்கிக் கடன் வளர்ச்சியின் வேகம் 2024 ஆம் நிதியாண்டில் வைப்புத் தொகை வளர்ச்சியை விஞ்சியது.
2024 ஆம் நிதியாண்டில், மார்ச் 22 ஆம் தேதியன்று வைப்புத் தொகை 13.5% அதிகரித்து 204.8 டிரில்லியன் ரூபாய் ஆகவும், உணவுத் துறை சாராத கடன் 20.2% அதிகரித்து 164.1 டிரில்லியன் ரூபாய் ஆகவும் இருந்தது.
2023 ஆம் நிதியாண்டில், வைப்புத் தொகை சுமார் 9.6% அளவிலும் மற்றும் கடன் 15.4% அளவிலும் வளர்ந்தது.