2,000 ரூபாய் மதிப்பிலான பணத் தாள்கள் 98 சதவீதம் வரை திரும்பப் பெறப்பட்டு உள்ளதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதியன்று 3.56 லட்சம் கோடி ரூபாயாக இருந்த 2000 ரூபாய் மதிப்பிலான தாள்களின் மொத்த மதிப்பு 7,117 கோடி ரூபாயாகக் குறைந்து உள்ளது.
2023 அம் ஆண்டு மே 19 ஆம் தேதி வரை புழக்கத்தில் இருந்த 2000 ரூபாய் மதிப்பிலான தாள்களின் 98 சதவீதம் ஆகும்.
2023 ஆம் ஆண்டு மே 19 ஆம் தேதியன்று, இந்திய ரிசர்வ் வங்கி 2,000 ரூபாய் மதிப்பிலான பணத் தாள்களை திரும்பப் பெறும் தனது திடீர் முடிவை அறிவித்தது.
இது 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதப் பணமதிப்பிழப்புக்குப் பிறகு அறிமுகப்படுத்தப் பட்ட பண மதிப்பு ஆகும்.