2005 ஆம் ஆண்டிலிருந்து இந்தியாவின் உமிழ்வுக் குறைப்பு
January 4 , 2025 18 days 112 0
2005 மற்றும் 2020 ஆகிய ஆண்டுகளுக்கு இடையில், கார்பன் உமிழ்வானது 2019 ஆம் ஆண்டுடன் ஒப்பிடும் போது 7.93% குறைந்துள்ளது, அதே நேரத்தில் உமிழ்வின் செறிவும் 36% குறைந்துள்ளது.
2024 ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்குள், நிறுவப்பட்ட மின்சார உற்பத்தித் திறனில் புதைபடிவம் சாரா எரிசக்தி மூலங்களின் பங்கு 46.52% ஆக இருந்தது.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் மொத்த நிறுவப்பட்ட திறன் 156.25 GW ஆகும்.
2023-24 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத் தக்க எரிசக்தி மூலங்களின் பெரும் பங்கானது உற்பத்தியில் 10.94% ஆகவும் மற்றும் நிறுவப்பட்ட திறனில் சுமார் 14.7 சதவீதத்திற்கும் அதிகமாகவும் அதிகரித்துள்ளன.
2022-23 ஆம் நிதியாண்டில் மொத்த இறுதி உற்பத்தி ஆற்றல் நுகர்வில் 48.95% பங்குடன், நாட்டின் மிகப்பெரிய ஆற்றல் நுகர்வுத் துறையாக தொழில்துறை உள்ளது.
தொழில்துறையில் 15.15% ஆற்றல் பயன்பாட்டுடன் அதிகளவு ஆற்றல் தேவை மிகுந்த பிரிவு இரும்பு மற்றும் எஃகு துறை ஆகும்.
இரசாயனங்கள் மற்றும் பெட்ரோலிய வேதியியல் துறையானது, சுமார் 4.56% ஆற்றல் பயன்பாட்டினையும், அதைத் தொடர்ந்து கட்டுமானத் துறையானது சுமார் 1.80% ஆற்றல் பயன்பாட்டினையும் கொண்டுள்ளன.
இதில் எரிசக்தி (75.66%), வேளாண்மை (13.72%), தொழில்துறைச் செயலாக்கம் மற்றும் தயாரிப்புப் பயன்பாடு (8.06%); மற்றும் கழிவுகள் (2.56%) ஆகியவை அதிகளவு கார்பன் உமிழ்வு பதிவாகியுள்ள துறைகளாகும்.