2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசுபவர்கள்
July 15 , 2018 2323 days 2081 0
இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி மற்றும் அதனுடைய வட்டார மொழிகள் உள்ளன. நாட்டில் 43 சதவீதத்திற்கு அதிகமானோர் தங்கள் தாய்மொழியாக இந்தியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்
மக்கள் பேசும் வெவ்வேறு தென்னிந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் ஆகியவை முந்தைய பல தசாப்தங்களில் இருந்ததை விட அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாட்டில் மற்ற மொழிகள் பேசும் மக்களுடன் ஒப்பிடும் போது சதவீத அளவில் இவற்றின் பங்கு சரிந்து கொண்டிருக்கிறது.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரால் (Office of the Registrar General and Census Commissioner) இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகளில், சமஸ்கிருத (Sanskrit) மொழியானது குறைவான மக்கள் பேசும் மொழியாகும்.
பழங்கால மொழியைப் பேசும் மக்களின் சதவீதமானது, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 121 கோடியில் 0.00198 சதவீதம் ஆகும்.
போடோ, மணிப்பூரி, கொங்கனி மற்றும் டோகிரி ஆகிய மொழிகளைப் பேசும் மக்களின் எண்ணிக்கையை விட முன்னிலையில் சமஸ்கிருதம் உள்ளது.
ஆங்கில மொழியானது அட்டவணைப் படுத்தப்படாத மொழியாகும். ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட மக்களின் எண்ணிக்கையானது ஏறக்குறைய 2.6 லட்சம் ஆகும்.
மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தாய்மொழி என்பது ‘குழந்தைப் பருவத்தில் தாயிடமிருந்து கற்றுக் கொண்டு குழந்தை, பேசும் மொழி’ என்று வரையறுக்கப்படுகிறது.