TNPSC Thervupettagam

2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இந்தியாவில் சமஸ்கிருதம் மொழி பேசுபவர்கள்

July 15 , 2018 2323 days 2079 0
  • இந்தியாவில் அதிகம் பேசப்படும் மொழியாக இந்தி மற்றும் அதனுடைய வட்டார மொழிகள் உள்ளன. நாட்டில் 43 சதவீதத்திற்கு அதிகமானோர் தங்கள் தாய்மொழியாக இந்தியை ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள்
  • மக்கள் பேசும் வெவ்வேறு தென்னிந்திய மொழிகள் மற்றும் ஆங்கிலம் ஆகியவை முந்தைய பல தசாப்தங்களில் இருந்ததை விட அதிகமாக வளர்ந்து கொண்டிருக்கின்றன. ஆனால் நாட்டில் மற்ற மொழிகள் பேசும் மக்களுடன் ஒப்பிடும் போது சதவீத அளவில் இவற்றின் பங்கு சரிந்து கொண்டிருக்கிறது.
  • மத்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் பதிவாளர் ஜெனரல் அலுவலகம் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரால் (Office of the Registrar General and Census Commissioner) இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் அட்டவணைப்படுத்தப்பட்ட 22 மொழிகளில், சமஸ்கிருத (Sanskrit) மொழியானது குறைவான மக்கள் பேசும் மொழியாகும்.
  • பழங்கால மொழியைப் பேசும் மக்களின் சதவீதமானது, இந்தியாவின் மொத்த மக்கள் தொகையான 121 கோடியில் 0.00198 சதவீதம் ஆகும்.
  • போடோ, மணிப்பூரி, கொங்கனி மற்றும் டோகிரி ஆகிய மொழிகளைப் பேசும் மக்களின் எண்ணிக்கையை விட முன்னிலையில் சமஸ்கிருதம் உள்ளது.
  • ஆங்கில மொழியானது அட்டவணைப் படுத்தப்படாத மொழியாகும். ஆங்கிலத்தை தாய்மொழியாகக் கொண்ட மக்களின் எண்ணிக்கையானது ஏறக்குறைய 2.6 லட்சம் ஆகும்.
  • மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி தாய்மொழி என்பது ‘குழந்தைப் பருவத்தில் தாயிடமிருந்து கற்றுக் கொண்டு குழந்தை, பேசும் மொழி’ என்று வரையறுக்கப்படுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்