TNPSC Thervupettagam

2015-20 ஆம் ஆண்டு அந்நிய வர்த்தகக் கொள்கையின் விரிவாக்கம்

October 2 , 2022 785 days 434 0
  • நாணய மதிப்பு ஏற்ற இறக்கம் மற்றும் உலகளாவில் நிலவும் நிச்சயமற்றத் தன்மை காரணமாக தற்போதைய வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையானது மேலும் ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கப் பட்டுள்ளது.
  • தற்போது, ​​அமெரிக்கா மற்றும் ஐரோப்பா போன்ற முக்கியப் பொருளாதாரங்களில் மந்த நிலை ஏற்படும் அச்சமானது நிலவி வருகிறது.
  • இதன் விளைவாக இந்தியாவில் முதலீடுகள் வேகமாக திரும்பப் பெறப்பட்டு அதனால் வெளிநாட்டு நிதிகள்  வெளியேறுகின்றன.
  • உக்ரைன் போரினால் ஏற்பட்டுள்ள புவிசார் அரசியல் நெருக்கடி, பணவீக்கம் மற்றும் பணவியல் கொள்கை நெருக்கடி ஆகியவை அமெரிக்க டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பைப் பலவீனப்படுத்துகின்றன.
  • தற்போது அமெரிக்க டாலர் மதிப்பு 22 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு அதிகமாகவும், டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு 81.6 என்ற வரலாறு காணாத அளவிலும் குறைவாக உள்ளது.
  • எனவே, நீண்ட கால வெளியுறவுக் கொள்கையினை (2022-27) ஏற்றுக் கொள்வதற்கு தற்போதைய புவிசார் அரசியல் சூழ்நிலை சாதகமாக இல்லை.
  • 2015-20 ஆம் காலகட்ட வெளிநாட்டு வர்த்தகக் கொள்கையானது, சரக்கு மற்றும் சேவைகளின் ஏற்றுமதியை அதிகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பை வழங்குவதோடு இந்தியாவில் எளிதாக வணிகம் செய்வதை மேம்படுத்துவதில் கவனம் செலுத்தவும் செய்கிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்