2015 முதல் 2024 ஆம் ஆண்டு வரையிலான காலக் கட்டத்தில் வெளிநாட்டு செயற்கைக் கோள்களை ஏவுவதன் மூலம் இந்தியா சுமார் 143 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள அந்நியச் செலாவணி வருவாயை ஈட்டியுள்ளது.
2015 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதல் 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் வரையில், மொத்தம் 393 வெளிநாட்டு செயற்கைக் கோள்கள் மற்றும் மூன்று இந்திய நுகர்வுப் பயன்பாட்டுச் செயற்கைக்கோள்கள் வணிக அடிப்படையில் விண்ணில் ஏவப்பட்டு உள்ளன.
இதுவரை வளர்ச்சியடைந்த நாடுகள் உட்பட 34 நாடுகளின் செயற்கைக்கோள்களை இந்தியா விண்ணில் ஏவியுள்ளது.
இதில் ஏவப்பட்ட மொத்த 393 வெளிநாட்டு செயற்கைக்கோள்களில் சுமார் 232 என்பது அமெரிக்காவிற்காகவும் 83 ஐக்கியப் பேரரசிற்காகவும் விண்ணில் ஏவப்பட்டது.