TNPSC Thervupettagam

2016-2017ல் உள்நாட்டு பணம் அனுப்புதலுக்கான முதன்மை ஆதாரம் - UAE

August 15 , 2018 2295 days 707 0
  • இந்திய ரிசர்வ் வங்கியால் நடத்தப்பட்ட 2016-2017ம் ஆண்டுக்கான உள்நாட்டு பணம் அனுப்புதலுக்கான கணக்கெடுப்பில் ஐக்கிய அரபு அமீரகம் முதலிடத்தில் உள்ளது. வெளிநாட்டிலிருந்து அனுப்பப்பட்ட மிக அதிக நிதியை பெற்ற மாநிலமாக கேரளா உள்ளது.
  • மொத்த பண அனுப்புதலில் UAE-ன் பங்கு 9% ஆகும். இதற்கு அடுத்த நிலையில் அமெரிக்கா (22.9%), சவுதி அரேபியா (11.6%), கத்தார் (6.5%) மற்றும் குவைத் (5.5%) ஆகியன உள்ளன.
  • கணக்கெடுப்பின்படி, இந்தியாவினால் பெறப்பட்ட 82% மொத்த பணம் அனுப்புதல் 8 நாடுகளிலிருந்து வருகிறது.
  • அந்த நாடுகளாவன:
    • UAE, அமெரிக்கா, சவுதி அரேபியா, கத்தார், குவைத், ஓமன், ஐக்கிய ராஜ்ஜியம் (U.K.) மற்றும் மலேசியா.
  • மொத்தத்தில் கேரளா அதிகபங்கான 19% னைக் கொண்டுள்ளது. இதற்கு பிறகு மகாராஷ்டிரா (7%) கர்நாடகா (15%) தமிழ்நாடு (8%) மற்றும் டெல்லி (5.9%) ஆகியன உள்ளன.
  • கேரளா, மகாராஷ்டிரா, கர்நாடகா மற்றும் தமிழ்நாடு ஆகியவை அனைத்தும் சேர்ந்து மொத்த பண அனுப்புதலில் 7% பங்கைக் கொண்டுள்ளன.
  • கணக்கெடுப்பிற்கான பதில்கள் 42 அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்பட்டுள்ளன. இது 2016-17ம் ஆண்டில் 3% மொத்த பண அனுப்புதலைக் கொண்டதாகும்.
  • ரூபாய் வரைவு ஏற்பாடுகள் (Rupee Drawing Arrangement - RDA) பணம் அனுப்புதலுக்கான பிரபலமான வழி ஆகும். RDA மூலம்2% பணம் அனுப்பப்பட்டுள்ளது.
  • இதனையடுத்து, SWIFT (19.5%), Direct Transfer (3.4%) மற்றும் காசோலை மற்றும் வரைவு மூலம் 9% ஆகியன உள்ளன.
  • மொத்த பணம் அனுப்புதலில் தனியார் வங்கிகளின் பங்கு 1% ஆகும். பொதுத் துறை வங்கிகளின் பங்கு 17.3% ஆகும். மீதமுள்ள பங்கு வெளிநாட்டு வங்கிகளினுடையதாகும்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்