காசநோய்க்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனிச்சிறப்பு வாய்ந்த பாரம்பரியத்தை கட்டமைத்ததற்காக (tradition of excellence) புதுதில்லியில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவிற்கு 2017-ஆம் ஆண்டிற்கான கோசோன் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
இந்தியாவில் காசநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை முடுக்குவதற்காக இந்திய காசநோய் ஆராய்ச்சி கூட்டமைப்பை உருவாக்கியதற்காக மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவிற்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.
கோசோன் பரிசு
காசநோய் ஒழிப்பிற்கான முயற்சியில் குறிப்பிடத்தகுப் பங்களிப்பினை ஆற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கவுரவிப்பதற்காக Stop-TB Partnership அமைப்பால் ஆண்டுதோறும் கோசோன் பரிசு வழங்கப்படுகின்றது.
தென்கொரியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓர் இலாப நோக்கமற்ற அறக்கட்டளையான கோசோன் அறக்கட்டளையால் (Kochon Foundation) இந்த பரிசு வழங்கப்படுகின்றது.
இப்பரிசானது 65,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையை கொண்டது.
சோங்-குன் டங் மருத்துவப் பொருட்கள் நிறுவனம் மற்றும் கோசோன் அறக்கட்டளையின் நிறுவனரான மறைந்த சோங் டுன் லீ-யினை கௌரவிப்பதற்காக 2006-ஆம் ஆண்டு இப்பரிசு நிறுவப்பட்டது.
ICMR
மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவானது (Indian Council for Medical Research) இந்திய ஆராய்ச்சி நிதி சங்கம் (Indian Research Fund Association -IRFA) என்ற பெயரில் 1911-ஆம் ஆண்டு நிறுவப்பட்டது.
இது உலகின் மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பாகும்.
உயர் மருத்துவ ஆராய்ச்சியின் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் மருந்து பொருட்களின் உள்ளடக்கக் கூறுகளின் கலப்பு உருவாக்கம் (Formulation) ஆகியவற்றுக்கான இந்தியாவின் உச்ச அறிவியல் அமைப்பே மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழு ஆகும்.
புது தில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்தக் குழுவானது மத்திய சுகாதாரம் மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் கீழ் செயல்படுகின்றது.
மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவினுடைய நிர்வாக அமைப்பின் (Governing body) தலைவராவார்.