2017 - தெற்காசிய பெண்கள் மேம்பாட்டு மன்ற மாநாடு - காத்மண்டு, நேபாளம்
September 9 , 2017 2680 days 980 0
தெற்காசிய பெண்கள் மேம்பாட்டு மன்றம் - “ எல்லைகளுக்கு குறுக்கே - சர்வதேச வியாபார பெண்கள் மாநாடு” என்ற நிகழ்வை நேபாளத்தின் காத்மண்டுவில் செப்டம்பர் 11 மற்றும் 12 தேதிகளில் நடத்தவிருக்கிறது.
இந்த நிகழ்வு சார்க் நாடுகளிலும், ஆசியான் நாடுகளிலும் உள்ள பெண் தொழில்முனைவோர்களிடையே ஒரு ஒத்துழைப்பை ஏற்படுத்த முயற்சி செய்யும்.
SAWDF (South Asian Women Development Forum) பற்றி
தெற்காசிய பெண்கள் மேம்பாட்டு மன்றம், நிறுவனங்கள் பதிவு (1977) சட்டத்தின் படி ஒரு சுயசார்புடைய இலாப நோக்கமற்ற, நேபாளத்தின் காத்மண்டுவை அடிப்படையாகக் கொண்ட நிறுவனமாகும். 24ம் தேதி, நவம்பர் 2014ல் காத்மண்டுவில் நடைபெற்ற 18வது சார்க் மாநாட்டில் இதற்கு சார்க் அங்கீகரித்த அமைப்பு என்ற தகுதி வழங்கப்பட்டது. சார்க் அங்கீகரித்த அமைப்பு என்ற தகுதியை பெறும் முதல் மற்றும் ஒரே நிறுவனம் இதுவேயாகும். இது பாலின விவகாரங்களுக்காக போராடும் நிறுவனமாகும்.