வயோஷ்ரேஸ்த சம்மன் எனும் திட்டத்தின் கீழ் மூத்த குடிமக்களுக்கான தேசிய விருதுகளை புதுதில்லியில் குடியரசுத் தலைவர் வழங்கினார்.
வயோஷ்ரேஸ்தவிருதுகள்
வயதானவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவிபுரியும் நிறுவனங்கள் மற்றும் மூத்த குடிமக்களின் சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த தேசிய விருது வழங்கப்படுகிறது.
மத்திய சமூகநீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தால் 2005-ல் நிறுவப்பட்ட இந்த விருதானது 2013 இல் தேசிய விருது என்று நிலை உயர்த்தப்பட்டது.
1999 ஆம் ஆண்டினை முதியோருக்கான சர்வதேச ஆண்டாக அறிவிக்க கொண்டுவரப்பட்ட தீர்மானத்தை ஐ.நா. பொதுச்சபை ஏற்றுக்கொண்டதன் இணக்கமாக ஒவ்வொரு வருடமும் சர்வதேச முதியோர் தினமான அக்டோபர் ஒன்றாம் தேதியன்று இவ்விருதுகள் வழங்கப்படுகின்றன.