TNPSC Thervupettagam

2017 – 18 ஆம் ஆண்டிற்கான NSO ஆய்வு

September 12 , 2020 1408 days 694 0
  • தேசியப் புள்ளியியல் அலுவலகமானது (NSO - National Statistical Office) தேசிய மாதிரி ஆய்வின் 75வது சுற்றின் ஒரு பகுதியாககுடும்ப சமூக நுகர்வு : இந்தியாவில் கல்விஎன்பது குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
  • இந்த ஆய்வானது 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தில் கல்வியறிவின் மாநில வாரியான தகவல்களை அளிக்கின்றது.

சிறப்பம்சங்கள்

  • கேரள மாநிலமானது நாட்டில் உயரிய கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது.
  • ஏறத்தாழ 96.2% அளவிலான அம்மாநில மக்கள் கல்வியறிவு கொண்டவர்களாக உள்ளனர்.
  • தில்லியானது 88.7% என்ற அளவுடன் 2வது சிறந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து உத்தரகாண்ட் 87.6% கல்வியறிவு விகிதத்தையும் இமாச்சலப் பிரதேசம் 86.6% கல்வியறிவு விகிதத்தையும் அசாம் 85.9% கல்வியறிவு விகிதத்தையும் கொண்டுள்ளன.
  • இதில் ஆந்திரப் பிரதேச மாநிலமானது 66.4% என்ற அளவில் கடைசி இடத்திலும் பீகார் 70.9% என்ற அளவில் அதற்கு முந்தைய இடத்திலும் தெலுங்கானா 72.8% என்ற அளவில் அதற்கு முந்தைய இடத்திலும் உள்ளன.
  • இந்தியாவில் உள்ள மக்களின் ஒட்டு மொத்தக் கல்வியறிவு விகிதம் 77.7% ஆகும்.
  • ஊரகப் பகுதியில் கல்வியறிவு விகிதமானது 73.5% ஆக உள்ளது.
  • நகர்ப்புறப் பகுதியில் கல்வியறிவு விகிதமானது 87.7% ஆக உள்ளது.
  • அனைத்து மாநிலங்களிலும் ஆண்களின் கல்வியறிவு விகிதமானது பெண்களின் கல்வியறிவு விகிதங்களை விட அதிகமாக உள்ளது.
  • இராஜஸ்தானில் ஆண்களின் கல்வியறிவு விகிதமானது 80.8% ஆகவும் பெண்களின் கல்வியறிவு விகிதமானது 57.6% ஆகவும் உள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்