- மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் மத்திய புள்ளியியல் அலுவலகம் (Central Statistics Office - CSO), 2017-18 நிதியாண்டிற்கான தேசிய வருமானம், நுகர்வோர் செலவு, சேமிப்பு மற்றும் முதலீட்டு உருவாக்கம் ஆகியவற்றுக்கான முதலாவது திருத்தப்பட்ட மதிப்பீட்டை வெளியிட்டிருக்கின்றது.
- இதனுடன் 2016-17 ஆம் நிதி ஆண்டிற்கான இரண்டாவது திருத்தப்பட்ட மதிப்பீட்டையும் 2011-12 ஆம் ஆண்டை அடிப்படை ஆண்டாகக் கொண்ட 2015-16 ஆம் நிதியாண்டின் மூன்றாவது திருத்தப்பட்ட மதிப்பீட்டையும் புதுப்பித்தல் கொள்கையின்படி வெளியிடப்பட்டன.
மதிப்பீடுகளின் சிறப்பம்சங்கள்
- பெயரளவிலான அல்லது நடப்பு விலைகளிலான மொத்த உள்நாட்டு உற்பத்தி (2016-17 நிதியாண்டில் ஏற்பட்ட 11.5 சதவிகிதத்தை ஒப்பிடுகையில், 2017-18 நிதியாண்டில் 11.3 சதவிகித அளவிற்கு வளர்ச்சியை வெளிக்காட்டுகின்றது)
- நிலையான விலைகளிலான அல்லது உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி 2016-17 நிதியாண்டில் 8.2 சதவிகித வளர்ச்சியையும் 2017-18 நிதியாண்டில் 7.2 சதவிகித வளர்ச்சியையும் காட்டுகின்றது.
- தற்போதைய விலைகளில் பெயரளவிலான நிகர தேசிய வருமானமான (Nominal Net National Income - NNI) முந்தைய 2016-17ம் நிதியாண்டில் ஏற்பட்ட 11.8 சதவிகிதத்தை ஒப்பிடும்போது 2017-18-ம் நிதியாண்டில் 11.3 சதவிகித வளர்ச்சியைக் காட்டுகின்றது.
- நடப்பு விலைகளில் உள்ள ஒட்டுமொத்த தேசிய செலவழிப்பு வருமானமானது (Gross National Disposable Income - GNDI) 2016-17 நிதியாண்டில் ஏற்பட்ட 11 சதவிகித வளர்ச்சியோடு ஒப்பிடப்படும்போது 2017-18ம் நிதியாண்டில் 11.2 சதவிகித வளர்ச்சியைக் காட்டுகின்றது.