TNPSC Thervupettagam

2017 ஆம் ஆண்டுக்கான (எட்டாவது) சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாடு

August 8 , 2017 2716 days 1068 0
  • 2017 ஆம் ஆண்டுக்கான (எட்டாவது) சர்வதேசத் தொழில் முனைவோர் மாநாடு, வரும் நவம்பர் மாதம் 28 ஆம் தேதி, இந்தியாவின் ஹைதராபாத் நகரில் நடைபெற உள்ளது.
  • இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் மற்றும் ஆந்திரப் பிரதேச அரசாங்கத்துடன் , நிதி ஆயோக் குழுவும் இணைந்து இந்த மாநாட்டினை ஒருங்கிணைக்க இருக்கிறது.
  • உலகளாவிய முதலீட்டாளர்களும் , தொழில் முனைவோர்களும் ஒன்று திரள்வதற்கான புதிய வாய்ப்பினை இந்த மாநாடு ஏற்படுத்தித் தருகின்றது.
  • உலகளாவிய மற்றும் வளர்ந்து வரும் ஆசிய ஆப்பிரிக்க நாடுகளின் தொழில் முனைவோர்களிடையே பொருளாதார வளர்ச்சியையும், புதிய வாய்ப்புகளை ஊக்குவிக்கவும் இம்மாநாடு பெரிதும் உதவுகிறது .
  • அமெரிக்க அதிபரின் மகள் இவாங்கா டிரம்ப் இம்மாநாட்டில் கலந்து கொள்ள உள்ளார் .
  • உலகளாவியத் தொழில் முனைவோர்களை ஒரே தளத்தில் கொண்டு வருவதற்கான ஏற்பாடாக அமெரிக்காவின் முந்தைய அதிபர் ஒபாமாவின் தலைமையின் கீழ் 2010 ஆம் ஆண்டு வாஷிங்டனில் இதன் முதல் மாநாடு நடத்தப்பட்டது .

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்