- விளையாட்டுத்துறையில் சிறந்து விளங்கும் வீரர்களுக்கு விளையாட்டு அமைச்சகம் ஆண்டுதோறும் விருதுகளை வழங்கி வருகிறது. அதன்படி 2017ஆம்ஆண்டிற்கான விருதுகள் பின்வருமாறு
ராஜீவ்காந்தி கேல் ரத்னா விருது
- இந்திய ஹாக்கி அணியின் முன்னாள் கேப்டனான சர்தார் சிங், 2016-ஆம் ஆண்டு ரியோ ஒலிம்பிக்கில் ஈட்டி எறிதலில் தங்கம் வென்ற தேவேந்திர ஜஜ்ஜாரியா ஆகியோருக்கு இந்திய விளையாட்டுத் துறையின் மிக உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல்ரத்னா விருது வழங்கப்படவுள்ளது.
அர்ஜுனா விருது
- ரியோ பாரா ஒலிம்பிக் உயரம் தாண்டுதலில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பனுக்கு அர்ஜுனா விருது வழங்கப்படவுள்ளது. அவருடன் வில்வித்தை வீராங்கனை சுரேகா, தடகள வீராங்கனை குஷ்பீர் கெளர், தடகள வீரர் ஆரோக்கிய ராஜீவ், கூடைப்பந்து வீராங்கனை பிரசாந்திசிங், குத்துச் சண்டை வீரர் லைஷ் ராம் தேவேந்திரசிங், கிரிக்கெட் வீரர் சேதேஷ்வர் புஜாரா, கிரிக்கெட் வீராங்கனை ஹர்மன்பிரீத் கெளர், கால்பந்து வீராங்கனை ஓய்னம் பெம்பெம் தேவி ஆகியோருக்கு அர்ஜுனா விருது வழங்கப்படுகிறது.
- இவர்களுடன், கோல்ஃப் வீரர் எஸ்.எஸ்.பி.செளராஸியா, ஹாக்கி வீரர் சுனில், கபடி வீரர் ஜஸ்பீர்சிங், துப்பாக்கி சுடுதல் வீரர் பி.என்.பிரகாஷ், டேபிள் டென்னிஸ் வீரர் அமல்ராஜ், டென்னிஸ் வீரர் சாகேத்மைனேனி, மல்யுத்த வீரர்சத்யவர்த்கடியான், பாரா தடகள வீரர் வருண்சிங் ஆகியோரும் அர்ஜுனா விருது பெறுகின்றனர்.
துரோணாச்சார்யா விருது
- பயிற்சியாளர்களுக்கான துரோணாச்சார்யா விருது 7 பேருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
- தடகள பிரிவில் மறைந்த ஆர்.காந்தி,
- கபடி பிரிவில் ஹீராநந்த் கட்டாரியா,
- பாட்மிண்டன் பிரிவில் ஜி.எஸ்.எஸ்.வி.பிரசாத் (வாழ்நாள் சாதனையாளர்),
- குத்துச்சண்டைப் பிரிவில் பிரிஜ்பூஷண் மொஹந்தி (வாழ்நாள் சாதனையாளர்),
- ஹாக்கி பிரிவில் பி.ஏ. ரஃபேல் (வாழ்நாள் சாதனையாளர்),
- துப்பாக்கி சுடுதல் பிரிவில் சஞ்சய் சக்ரவர்த்தி (வாழ்நாள் சாதனையாளர்),
- மல்யுத்த பிரிவில் ரோஷன் லால் (வாழ்நாள் சாதனையாளர்)
ஆகியோருக்கு துரோணாச்சார்யா விருது வழங்கப்படவுள்ளது.
தியான் சந்த் விருது
- வாழ்நாள் சாதனையாளருக்கான தயான்சந்த் விருது 3 பேருக்கு வழங்கப்படுகிறது.
- தடகள பிரிவில் பூபேந்தர்சிங்,
- கால்பந்து பிரிவில் செய்ய துஷாஹித் ஹக்கிம்,
- ஹாக்கி பிரிவில் சுமராய் டேடே
ஆகியோருக்கு தயான் சந்த்விருது வழங்கப்படவுள்ளது.