சமீபத்தில் நட்டிக்சிஸ் (Natixis Global Asset Management) என்ற பிரெஞ்சு நிறுவனம் உலகளாவிய பணி ஓய்வுக் குறியீட்டை (Global Retirement) வெளியிட்டுள்ளது.
நிதியளிப்புகள், சுகாதாரப் பராமரிப்பு, மற்றும் வாழ்க்கை தரத்தை விளக்கும் 18 செயல்திறன் குறிகாட்டிகளிலிருந்து, இந்தத் தரவரிசை ஒவ்வொரு நாட்டிற்கும் ஒட்டுமொத்த ஓய்வூதிய பாதுகாப்பு மதிப்பீட்டை வழங்குகிறது.
இதில் நார்வே முதலிடம் வகிக்கிறது, சுவிட்சர்லாந்து மற்றும் ஐஸ்லாந்து அடுத்தடுத்த இடங்களை பெற்றுள்ளன.
இந்தியா முந்தைய ஆண்டு தரவரிசையில் இருந்து எந்த மாற்றமும் இல்லாமல் 43 வது இடத்தில் உள்ளது.
இதில் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரியா ஆகிய நாடுகள் மிகப்பெரிய வருடாந்திர சரிவைக் கண்டுள்ளன.