TNPSC Thervupettagam
March 18 , 2018 2346 days 696 0
  • காசநோய்க்கான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் தனிச்சிறப்பு வாய்ந்த பாரம்பரியத்தை கட்டமைத்ததற்காக (tradition of excellence) புதுதில்லியில் உள்ள மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவிற்கு 2017-ஆம் ஆண்டிற்கான கோசோன் பரிசு வழங்கப்பட்டுள்ளது.
  • இந்தியாவில் காசநோய் தொடர்பான ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பணிகளை முடுக்குவதற்காக இந்திய காசநோய் ஆராய்ச்சி கூட்டமைப்பை உருவாக்கியதற்காக  மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவிற்கு இப்பரிசு வழங்கப்பட்டுள்ளது.

கோசோன் பரிசு

  • காசநோய் ஒழிப்பிற்கான முயற்சியில் குறிப்பிடத்தகுப் பங்களிப்பினை ஆற்றும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை கவுரவிப்பதற்காக Stop-TB Partnership அமைப்பால் ஆண்டுதோறும் கோசோன் பரிசு வழங்கப்படுகின்றது.
  • தென்கொரியாவில் பதிவு செய்யப்பட்டுள்ள ஓர் இலாப நோக்கமற்ற அறக்கட்டளையான கோசோன் அறக்கட்டளையால் (Kochon Foundation) இந்த பரிசு வழங்கப்படுகின்றது.
  • இப்பரிசானது 65,000 அமெரிக்க டாலர்கள் பரிசுத் தொகையை கொண்டது.
  • சோங்-குன் டங் மருத்துவப் பொருட்கள் நிறுவனம் மற்றும் கோசோன் அறக்கட்டளையின் நிறுவனரான மறைந்த சோங் டுன் லீ-யினை கௌரவிப்பதற்காக 2006-ஆம் ஆண்டு இப்பரிசு நிறுவப்பட்டது.

ICMR

  • மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவானது (Indian Council for Medical Research) இந்திய ஆராய்ச்சி நிதி சங்கம் (Indian Research Fund Association -IRFA) என்ற பெயரில்  1911-ஆம் ஆண்டு    நிறுவப்பட்டது.
  • இது உலகின் மிகவும் பழமையான மற்றும் மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி அமைப்பாகும்.
  • உயர் மருத்துவ ஆராய்ச்சியின் மேம்பாடு, ஒருங்கிணைப்பு மற்றும் மருந்து பொருட்களின் உள்ளடக்கக் கூறுகளின் கலப்பு உருவாக்கம் (Formulation) ஆகியவற்றுக்கான இந்தியாவின் உச்ச அறிவியல் அமைப்பே  மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழு   ஆகும்.
  • புது தில்லியில் தலைமையகத்தைக் கொண்டுள்ள இந்தக் குழுவானது  மத்திய சுகாதாரம்  மற்றும் குடும்பநல அமைச்சகத்தின் சுகாதார ஆராய்ச்சித் துறையின் கீழ் செயல்படுகின்றது.
  • மத்திய சுகாதார அமைச்சர் மருத்துவ ஆராய்ச்சிக்கான இந்தியக் குழுவினுடைய நிர்வாக அமைப்பின் (Governing body) தலைவராவார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்