2017 விம்பிள்டன் டென்னிஸ் ரோஜர் ஃபெடரர் 8-ஆவது முறையாக சாம்பியன்
July 17 , 2017 2752 days 1273 0
விம்பிள்டன் டென்னிஸ் போட்டியின் ஆடவர் ஒற்றையர் பிரிவில் ஸ்விட்சர்லாந்தின் ரோஜர் ஃபெடரர் 8-ஆவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றார்.
இதன்மூலம் விம்பிள்டனில் அதிகமுறை பட்டம் வென்றவர் என்ற வரலாற்று சாதனையைப் படைத்தார்.
முன்னதாக 7 பட்டங்களுடன் பீட் சாம்ப்ராஸ், வில்லியம் ரென்ஷா ஆகியோருடன் முதலிடத்தைப் பகிர்ந்திருந்த ஃபெடரர் இப்போது அவர்களை பின்னுக்குத் தள்ளியிருக்கிறார்.
கிராண்ட்ஸ்லாம் போட்டிகளில் ஒன்றான விம்பிள்டன் டென்னிஸ் போட்டி லண்டனில் நடைபெற்று வந்தது. இதில் நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் இறுதிச் சுற்றில் ரோஜர் ஃபெடரர் குரோஷியாவின் மரின் சிலிச்சை தோற்கடித்தார்.
விம்பிள்டனில் வென்ற மூத்த வீரர்
"ஓபன் எராவில்" விம்பிள்டன் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற பெருமை 35 வயதான ரோஜர் ஃபெடரர் வசமானது.
முன்னதாக விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற மூத்த வீரர் என்ற சாதனை அமெரிக்காவின் ஆர்தர் ஆஷ் வசம் இருந்தது.
அவர் 1975-இல் விம்பிள்டனில் பட்டம் வென்றபோது அவருக்கு வயது
இந்த விம்பிள்டன் தொடரில் ரோஜர் ஃபெடரர் அனைத்து ஆட்டங்களிலும் நேர் செட்களிலேயே வென்றார்.
இதன்மூலம் கடந்த 41 ஆண்டுகளில் ஒரு செட்டைக் கூட இழக்காமல் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றவர் என்ற சாதனையை படைத்திருக்கிறார்.
இதற்கு முன்னர் 1976-இல் ஜார் போர்க் ஒரு செட்டைக் கூட இழக்காமல் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்றிருந்தார்.
5 ஆண்டுகளுக்குப் பிறகு
கடைசியாக 2012-இல் விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்ற ஃபெடரர் அதன்பிறகு இரு முறை இறுதிச் சுற்று வரை முன்னேறிய போதிலும் அவரால் பட்டம் வெல்ல முடியவில்லை. ஜோகோவிச்சிடம் தோற்று வெளியேறினார். எனினும் நம்பிக்கையை இழக்காத ஃபெடரர் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஆஸ்திரேலிய ஓபனில் வாகை சூடினார்.
அதன்பிறகு விம்பிள்டனை கருத்தில் கொண்டு முக்கியப் போட்டிகளில் மட்டுமே பங்கேற்று வந்த நிலையில் தற்போது தனது கனவு போட்டியான விம்பிள்டனில் சாம்பியன் பட்டம் வென்று வரலாறு படைத்துள்ளார்.
19 கிராண்ட்ஸ்லாம்
ரோஜர் ஃபெடரர் ஆஸ்திரேலிய ஓபனில் 5, பிரெஞ்சு ஓபனில் 1, விம்பிள்டனில் 8, அமெரிக்கா ஓபனில் 5 என மொத்தம் 19 கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றுள்ளார்.
ஆடவர் ஒற்றையர் பிரிவில் அதிக கிராண்ட்ஸ்லாம் பட்டங்கள் வென்றவர் என்ற சாதனையும் ஃபெடரர் வசமேயுள்ளது.
விம்பிள்டனில் இதுவரை
விம்பிள்டனில் முதல் முறையாக 2003-இல சாம்பியன் பட்டம் வென்ற ரோஜர் ஃபெடரர், இப்போது 8-ஆவது பட்டத்தைக் கைப்பற்றி வரலாறு படைத்திருக்கிறார்.
விம்பிள்டனில் இதுவரை ஃபெடரர் வென்ற பட்டங்களும் இறுதிச் சுற்றில் அவரிடம் தோற்றவர்களும்,