தேசியப் புள்ளியியல் அலுவலகமானது (NSO - National Statistical Office) தேசிய மாதிரி ஆய்வின் 75வது சுற்றின் ஒரு பகுதியாக “குடும்ப சமூக நுகர்வு : இந்தியாவில் கல்வி” என்பது குறித்த தனது அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்வானது 2017 ஆம் ஆண்டு ஜூலை மாதத்திலிருந்து 2018 ஆம் ஆண்டு ஜுன் மாதம் வரையிலான காலகட்டத்தில் கல்வியறிவின் மாநில வாரியான தகவல்களை அளிக்கின்றது.
சிறப்பம்சங்கள்
கேரள மாநிலமானது நாட்டில் உயரிய கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது.
ஏறத்தாழ 96.2% அளவிலான அம்மாநில மக்கள் கல்வியறிவு கொண்டவர்களாக உள்ளனர்.
தில்லியானது 88.7% என்ற அளவுடன் 2வது சிறந்த கல்வியறிவு விகிதத்தைக் கொண்டுள்ளது. இதற்கு அடுத்து உத்தரகாண்ட் 87.6% கல்வியறிவு விகிதத்தையும் இமாச்சலப் பிரதேசம் 86.6% கல்வியறிவு விகிதத்தையும் அசாம் 85.9% கல்வியறிவு விகிதத்தையும் கொண்டுள்ளன.
இதில் ஆந்திரப் பிரதேச மாநிலமானது 66.4% என்ற அளவில் கடைசி இடத்திலும் பீகார் 70.9% என்ற அளவில் அதற்கு முந்தைய இடத்திலும் தெலுங்கானா 72.8% என்ற அளவில் அதற்கு முந்தைய இடத்திலும் உள்ளன.
இந்தியாவில் உள்ள மக்களின் ஒட்டு மொத்தக் கல்வியறிவு விகிதம் 77.7% ஆகும்.
ஊரகப் பகுதியில் கல்வியறிவு விகிதமானது 73.5% ஆக உள்ளது.
நகர்ப்புறப் பகுதியில் கல்வியறிவு விகிதமானது 87.7% ஆக உள்ளது.
அனைத்து மாநிலங்களிலும் ஆண்களின் கல்வியறிவு விகிதமானது பெண்களின் கல்வியறிவு விகிதங்களை விட அதிகமாக உள்ளது.
இராஜஸ்தானில் ஆண்களின் கல்வியறிவு விகிதமானது 80.8% ஆகவும் பெண்களின் கல்வியறிவு விகிதமானது 57.6% ஆகவும் உள்ளது.