TNPSC Thervupettagam

2018 ஃபிபா உலகக் கோப்பை கால்பந்து போட்டி - இத்தாலி

November 15 , 2017 2594 days 909 0
  • சுவீடனுக்கு எதிரான உலகக் கோப்பை தகுதிச் சுற்று பிளே ஆஃப் ஆட்டம் கோல்களின்றி டிரா (0-0) ஆனதால், 2018-ல் இரஷ்யாவில் நடைபெறவிருக்கும் உலகக் கோப்பை கால்பந்து போட்டியில் பங்கேற்கும் தகுதி வாய்ப்பை இத்தாலி இழந்துள்ளது.
  • 1958-ஆம் ஆண்டு ஸ்வீடன் உலகக் கோப்பையின் போது இதே  போன்ற  நிலைமையை இத்தாலி சந்தித்தது.  அதைத் தொடர்ந்து  60 வருடங்களுக்கு பிறகு முதல் முறையாக இத்தாலி அணி  (கிலி அஜ்சூர்ரி)   உலகக் கோப்பைக்குத் தகுதிபெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
  • 2006-ஆம் ஆண்டுக்குப் பிறகு முதல் முறையாக சுவீடன் அணி உலகக் கோப்பைக்குத் தகுதி பெற்றுள்ளது.
  • 4 முறை உலகக் கால்பந்து கோப்பை சாம்பியனான இத்தாலி, இதனோடு சேர்ந்து மொத்தம் 3 தருணங்களில்  முறையே  1930, 1958, 2018  ஆகிய வருடங்களுக்கான உலகக் கோப்பைக்குத்  தகுதி பெறும் வாய்ப்பை இழந்துள்ளது.
  • இத்தாலி நாட்டின் தேசிய கால்பந்து அணி கிலி அஜ்சூர்ரி (Gli Azzurri) என்றழைக்கப்படுகிறது. இத்தாலியைப் பிரதிநிதித்துவப்படுத்தும் இத்தாலிய தேசிய அணிகள்  மற்றும் தடகள வீரர்கள்  பயன்படுத்தும் பாரம்பரிய வண்ணத்தால் இப்பெயர் வைக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்