TNPSC Thervupettagam

2018 அல்பானி மருத்துவ மையப் பரிசு

August 18 , 2018 2293 days 686 0
  • அமெரிக்காவைச் சேர்ந்த
    • ஜேமஸ் அலிசன்
    • கார்ல் ஜூன் மற்றும்
    • ஸ்டீவன் ரோசன்பெர்க்
ஆகிய மூன்று ஆராய்ச்சியாளர்கள் மருத்துவம் மற்றும் உயிரிமருத்துவ ஆராய்ச்சியில் 2018 ஆம் ஆண்டிற்கான அல்பானி மருத்துவ மையப் பரிசிற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.
  • நியூயார்க்கின் அல்பானியில் 2018 ஆம் ஆண்டு செப்டம்பரில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சியில்  தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இந்த ஆராய்ச்சியாளர்கள் இவ்விருதைப் பெறவுள்ளனர்.
  • புற்று நோய், எச்ஐவி மற்றும் இதர நோய்களுக்கு புதுமுறை மருத்துவ சிகிச்சைக்கு வழி வகுக்கும் நோய் எதிர்ப்பியல் ஆராய்ச்சி மற்றும் அவர்களுடைய கருத்துகளை பயனுள்ள நோய்  நீக்கல் முறைக்கு மாற்றுதல் ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது தேர்ந்தெடுக்கப்பட்ட ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படுகிறது.
  • இந்த விருது அல்பானி மருத்துவ மையத்தால் வழங்கப்படும் மருத்துவம் மற்றும் உயிரிமருத்துவ ஆராய்ச்சிகளுக்கான ஐ.நா.வின் இரண்டாவது உயரிய விருது ஆகும்.
  • இந்த விருது மறைந்த மோரிஸ் “மார்டி” சில்வர்மேன் என்பவரால் 2000 ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. இவ்விருது ஒவ்வொரு ஆண்டும் வழங்கப்படுகிறது. இவ்விருது $5,00,000 பரிசுத் தொகையைக் கொண்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்