TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கான செலவுகள்

June 10 , 2019 1997 days 685 0
  • சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனமானது (International Renewable Energy Agency- IRENA) 2018 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கான செலவுகள் எனும் தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
  • இந்த ஆய்விற்காக IRENA அமைப்பானது 2010 முதல் 2018 வரை எட்டு மிகப்பெரிய சூரிய ஒளி ஆற்றல் சந்தை நாடுகளை ஆய்வு செய்தது.
  • சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இதில் அடங்கும்.
  • இந்த அறிக்கையின்படி உலகளாவிய அளவில் மிகக் குறைவான விலையில் சூரிய ஒளி ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது.
  • புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களானது உலகளவில் உற்பத்தி விலைக் குறைப்பைக் கண்டுள்ளன.
IRENA
  • 2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் ஒப்பந்தமானது 2010 ஆம் ஆண்டு ஜூலை 08 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. இதன் தலைமையகம் அபுதாபியின் மஸ்தார் நகரில் அமைந்துள்ளது.
  • இது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மீது பிரத்தியேகமாக கவனம் செலுத்தும் முதல் சர்வதேச அமைப்பாகும்.
  • இது ஒத்துழைப்பு, மேம்பட்ட அறிவு , புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தேர்ந்தெடுப்பு மற்றும் அவற்றின் நீடித்த பயன்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பு ஆகும்.
  • இது ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வப் பார்வையாளர் அந்தஸ்து பெற்ற அமைப்பு ஆகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்