2018 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கான செலவுகள்
June 10 , 2019 1997 days 684 0
சர்வதேச புதுப்பிக்கத்தக்க ஆற்றல் நிறுவனமானது (International Renewable Energy Agency- IRENA) 2018 ஆம் ஆண்டில் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்திக்கான செலவுகள் எனும் தலைப்பில் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
இந்த ஆய்விற்காக IRENA அமைப்பானது 2010 முதல் 2018 வரை எட்டு மிகப்பெரிய சூரிய ஒளி ஆற்றல் சந்தை நாடுகளை ஆய்வு செய்தது.
சீனா, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், ஐக்கியப் பேரரசு மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் இதில் அடங்கும்.
இந்த அறிக்கையின்படி உலகளாவிய அளவில் மிகக் குறைவான விலையில் சூரிய ஒளி ஆற்றலை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா திகழ்கிறது.
புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மூலங்களானது உலகளவில் உற்பத்தி விலைக் குறைப்பைக் கண்டுள்ளன.
IRENA
2009 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த அமைப்பின் ஒப்பந்தமானது 2010 ஆம் ஆண்டு ஜூலை 08 ஆம் நாள் நடைமுறைக்கு வந்தது. இதன் தலைமையகம் அபுதாபியின் மஸ்தார் நகரில் அமைந்துள்ளது.
இது வளர்ந்த மற்றும் வளரும் நாடுகளின் ஆற்றல் தேவைகளைப் பூர்த்தி செய்வதன் மூலம் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மீது பிரத்தியேகமாக கவனம் செலுத்தும் முதல் சர்வதேச அமைப்பாகும்.
இது ஒத்துழைப்பு, மேம்பட்ட அறிவு , புதுப்பிக்கத்தக்க ஆற்றல் தேர்ந்தெடுப்பு மற்றும் அவற்றின் நீடித்த பயன்பாடு ஆகியவற்றை ஊக்குவிக்கும் அரசுகளுக்கிடையேயான ஒரு அமைப்பு ஆகும்.
இது ஐக்கிய நாடுகளின் அதிகாரப்பூர்வப் பார்வையாளர் அந்தஸ்து பெற்ற அமைப்பு ஆகும்.