அமெரிக்கக் குடியுரிமை மற்றும் புலம்பெயர்வு சேவைகள் அறிக்கையின்படி (USCIS - S. Citizenship and Immigration Services), இவ்வாண்டு அக்டோபர் 5 ஆம் தேதி வரையில் ஹெச்-1பி விசா வைத்திருக்கும் 4 நபர்களில் மூன்று பேர் இந்தியர்கள் ஆவர்.
இந்த அறிக்கை மிகப்பெரிய அளவில் பாலின வேறுபாடு உள்ளது என்பதை காட்டுகிறது. ஹெச் - 1பி விசா வைத்திருக்கும் நான்கு நபர்களில் ஒருவர் மட்டுமே பெண் ஆவார்.
இந்தியர்களுக்கிடையே பாலின வேறுபாடு மிக அதிக அளவில் இருக்கிறது.
அமெரிக்காவில் ஹெச் - 1பி விசா வைத்திருப்பவர்களில் 73.9 சதவீதம் பேர் இந்தியர்கள் ஆவர். இந்தியர்களுக்கு அடுத்த இடத்தில் சீனர்கள் உள்ளனர்.
இந்தப் பட்டியலில் இந்தியா மற்றும் சீனாவுக்கு அடுத்து கனடா மற்றும் தென் கொரியா ஆகிய நாடுகள் உள்ளன.