TNPSC Thervupettagam

2018 கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டுகள் - டூடுல்

October 8 , 2018 2112 days 604 0
  • கூகுளானது 2018 கோடைக்கால இளைஞர் ஒலிம்பிக் விளையாட்டின் 3வது பதிப்பின் தொடக்கத்தை அக்டோபர் 6 அன்று அசைவூட்டப்பட்ட டூடுலுடன் கொண்டாடியது.
  • இது அர்ஜென்டினாவின் ப்யூனோஸ் ஏர்ஸ் நகரில் அக்டோபர் 18 வரை நடைபெறும்.
  • இந்த விளையாட்டில் உள்ள பல்வேறு ஆட்டங்களை (Games) காட்டும் இந்த GIF டூடுலானது சிந்தியா யுவான் செங்க் மற்றும் விருந்தா ஜவேரி ஆகியோரால் உருவாக்கப்பட்டது.
  • இந்த ஆண்டின் சின்னமானது அர்ஜென்டினாவை தாயகமாகக் கொண்ட பதின்பருவ சிறுத்தையான (jaguar) பாண்டி ஆகும்.
  • இந்த விளையாட்டின் கோடை மற்றும் குளிர்கால பதிப்புகள் வெவ்வேறு நாடுகளில் உள்ள நகரங்களில்  4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.
  • முதல் விளையாட்டுப் போட்டியானது 2010-ல் சிங்கப்பூரில் நடைபெற்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்