2018 –டைம்ஸ் உயர்கல்வி வளரும் பொருளாதார நாடுகளின் பல்கலைக்கழகங்கள் தரவரிசை
May 18 , 2018 2387 days 703 0
அண்மையில் வெளியிடப்பட்டுள்ள 2018-ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் உயர்கல்வி வளரும் பொருளாதார நாடுகளினுடைய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் (Times Higher Education Emerging Economies University Rankings 2018) இந்தியப் பல்கலைக்கழகங்கள் தங்களினுடைய தரவரிசைகளில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.
இந்த தரவரிசைப் பட்டியலில் முதல் 50 தரவரிசையுள் 4 இந்தியக் கல்வி நிறுவனங்கள் தரவரிசையினைப் பெற்றுள்ளன. முதல் 100 தரவரிசையுள் 8 இந்தியப் பல்கலைக்கழகங்கள் தரவரிசையினைப் பெற்றுள்ளன.
இந்த தரவரிசைப் பட்டியலில் பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Science-IISC) 13-வது இடத்திலும், மும்பையின் இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology -IIT) 26வது இடத்திலும், கரக்பூரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology- IIT) 45 இடத்திலும் உள்ளது.
தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நடப்பாண்டின் டைம்ஸ் உயர்கல்வி வளரும் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில், சீனாவின் பெகிங் பல்கலைக்கழகமும் (Peking University) டிசிங்குவா பல்கலைக்கழகமும் (Tsinghua University) முதல் இரு இடங்களில் உள்ளன. மேலும் முதல் 10 இடங்களில் கூடுதலாக 5 சீனப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.