பிரிட்டனின் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சிக்கான மையத்தின் (Centre for Economics and Business Research) 2018-ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார லீக் அட்டவணைப்படி (World Economic league Table), 2018-ஆம் ஆண்டு பொருளாதார வல்லமையில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை விஞ்சி, உலகின் 5-வது பெரிய பொருளாதாரமுடைய நாடாக இந்தியா உயர உள்ளது.
இவ்வட்டவணையின் நடப்பாண்டிற்கான அறிவிப்பின் படி, ஏழாவது இடத்தில் உள்ள இந்தியா பொருளாதார வல்லமையில், அமெரிக்க டாலர்கள் மதிப்பின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை பின் தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதாரமுடைய நாடாகவும், 2032-ல் 3வது பெரிய பொருளாதார நாடாகவும் உயர உள்ளது.
மேலும் இவ்வட்டவணைப்பின் அறிவிப்பின் படி, 2032-ல் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமுடைய முதல் நாடாக உயர உள்ளது.
உலகச் சந்தையில் மலிவான ஆற்றலும், தொழிற்நுட்ப விலைகளுமே 2018-ல் உலக பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் துறையின் மீது அதிகளாவிய சார்பையும், சர்வதேச எண்ணெய் சந்தையில் தன்னுடைய எண்ணெய் எரிபொருட்களுக்கு மிகக் குறைந்த சரக்கு விலையையும் (Low Oil commodity Price) கொண்டுள்ளதன் காரணமாக 2017-ல் 11வது பெரிய பொருளாதாரமுடைய நாடாக உள்ள இரஷ்யா 2032-ல் 17வது இடத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.