2018 ரமோன் மகசேசே விருது பெற்றவர்களாக அறிவிக்கப்பட்ட ஆறு நபர்களில் பரத் வத்வானி மற்றும் சோனம் வாங்சுக் ஆகியோர் இந்தியர்கள் ஆவர்.
பரத் வத்வானி மும்பையின் தெருக்களில் வாழும் மனதளவில் பாதிக்கப்பட்டவர்களுக்காக பணியாற்றிய மனநல மருத்துவர் ஆவார்.
சோனம் வாங்சுக் லடாக்கினை சேர்ந்த கல்வி சீர்திருத்தவாதி ஆவார்.
1988-ல் சோனம் வாங்சுக் லடாக் ஏழை மாணவர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக மாணவர்களின் கல்வி மற்றும் பண்பாடு இயக்கத்தினை நிறுவினார்.
விருது பெற்ற மற்ற ஆறு நபர்கள்
யோக் சங்க் (கம்போடியா)
மரியா டி லோர்டஸ் க்ரஸ் (கிழக்கு தைமூர்)
ஹோவர்டு டீ (பிலிப்பைன்ஸ்) மற்றும்
வோ தி ஹோங்க் யேன் (வியட்நாம்)
ஆகஸ்ட் 2018ல் பிலிப்பைன்ஸில் நடைபெற உள்ள முறையான விருது வழங்கும் விழாவில் இவர்களுக்கு இவ்விருது வழங்கப்படும்.
ரமோன் மக்சேசே விருது
இது ஆசியாவின் உயர்ந்த கௌரவமாகவும் இப்பிராந்தியத்தின் நோபல் பரிசுக்கு இணையான விருதாகவும் கருதப்படுகிறது.
இது நியூயார்க் நகரத்தின் ராக்ஃபெல்லர் சகோதரர்கள் தொண்டு நிறுவனத்தின் அறங்காவலர்கள் மற்றும் மார்ச் 1957-ல் விமான விபத்தில் இறந்த பிலிப்பைன்ஸின் மூன்றாவது அதிபரான ரமோன் மக்சேசேய ஆகியோரது நினைவாக பிலிப்பைன்ஸ் அரசினால் 1957-ல் நிறுவப்பட்டது.
இவ்விருது ஆசியப் பகுதியின் தனிநபர் (அ) அமைப்புகளுக்கு அவர்களின் பொது நல மற்றும் அறப்பணி சேவைகளுக்காக வழங்கப்படுகிறது.
இதில் மறைந்த அதிபர் ரமோன் மகசேசே உருவப்படம் தாங்கிய பதக்கம், பரிசுத் தொகை மற்றும் சான்றிழ் ஆகியவை உள்ளடங்கும்.