- சர்வதேச டென்னிஸ் மன்றமானது
- செர்பியாவின் நோவாக் ஜோகோவிக் (ஆண்கள் ஒற்றையர் பிரிவு)
- ரோமானியாவின் சிமோனா ஹாலெப் (பெண்கள் ஒற்றையர் பிரிவு)
ஆகியோரை 2018 ஆம் ஆண்டிற்கான ITF உலக சாம்பியன்களாக அறிவித்துள்ளது.
- ஜோகோவிக் ஆறாவது முறையாக இவ்விருதைப் பெறுகிறார்.
- சிமோனா ஹாலெப் முதன்முறையாக இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட்டுள்ளார். மேலும் இவர் 2018 ஆம் ஆண்டிற்கான WTA ஷாட் ஆப் தி இயர் விருதையும் வென்றுள்ளார்.
- பாரீஸின் ரோலந்து கேரோஸ் நகரில் 2019 ஆம் ஆண்டின் ITF உலக சாம்பியன்ஸ்களுக்கான இரவு விருந்தில் ITF உலக சாம்பியன்கள் தங்கள் விருதைப் பெறவுள்ளனர்.
ஆண்களுக்கான இரட்டையர் பிரிவு
- அமெரிக்காவைச் சேர்ந்த மைக் பிரயான் மற்றும் ஜேக் சோக் ஆகியோர் இவ்விருதைப் பெறவுள்ளனர்.
- பிரயான் 12-வது முறையாக இவ்விருதைப் பெறவுள்ளார். ஆனால் சோக் முதன்முறையாக இவ்விருது வழங்கி கௌரவிக்கப்பட விருக்கிறார்
- பெண்களுக்கான இரட்டையர் பிரிவு - பார்போரா கிரிஜெசிகோவா மற்றும் கேத்தரீனா சினியாகோ.