நார்வேவைச் சேர்ந்த நோபல் குழுவானது 2018 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசிற்கு டாக்டர் டெனிஸ் முகாவேஜ் (63) மற்றும் நாடியா முரட் ஆகியோரை கூட்டாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
போர் மற்றும் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்துதல் ஆகியவற்றில் பாலியல் வன்முறையை கருவியாகப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டதற்காக இவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்டுகிறது.
டாக்டர் டெனிஸ் முகாவேஜ் காங்கோவைச் சேர்ந்த மகப்பேறு அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவார்.
ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ மக்களாட்சிக் குடியரசில் போர் நடைபெற்ற காலங்களில் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து உதவி செய்ததற்காக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஆயிரம் யாசிதி பெண்களில் நாடியா முரட்டும் ஒருவர். இவர் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பித்து, ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இவரும் யாசிதி பெண்களும் அடைந்த துன்பத்தை பொது வெளியில் பேசினார்.
முரட், 2016 ஆம் ஆண்டில் மனிதக் கடத்தல்கலிலிருந்து மீண்டவர்களின் கண்ணியத்திற்கான ஐ.நா. அமைப்பின் முதலாவது நல்லிணக்கத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.