TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசு

October 7 , 2018 2144 days 628 0
  • நார்வேவைச் சேர்ந்த நோபல் குழுவானது 2018 ஆம் ஆண்டின் அமைதிக்கான நோபல் பரிசிற்கு டாக்டர் டெனிஸ் முகாவேஜ் (63) மற்றும் நாடியா முரட் ஆகியோரை கூட்டாகத் தேர்ந்தெடுத்துள்ளது.
  • போர் மற்றும் ஆயுதம் ஏந்தி தாக்குதல் நடத்துதல் ஆகியவற்றில் பாலியல் வன்முறையை கருவியாகப் பயன்படுத்துவதை முடிவுக்குக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டதற்காக இவர்களுக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்டுகிறது.
  • டாக்டர் டெனிஸ் முகாவேஜ் காங்கோவைச் சேர்ந்த மகப்பேறு அறுவை சிகிச்சை மருத்துவர் ஆவார்.
  • ஆப்பிரிக்க நாடுகளில் ஒன்றான காங்கோ மக்களாட்சிக் குடியரசில் போர் நடைபெற்ற காலங்களில் பாலியல் வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளித்து உதவி செய்ததற்காக இவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகிறது.
  • ஐ.எஸ் தீவிரவாதிகளால் கடத்தப்பட்ட ஆயிரம் யாசிதி பெண்களில் நாடியா முரட்டும் ஒருவர். இவர் ஐ.எஸ் தீவிரவாதிகளிடமிருந்து தப்பித்து, ஐ.எஸ் தீவிரவாதிகளிடம் இவரும் யாசிதி பெண்களும் அடைந்த துன்பத்தை பொது வெளியில் பேசினார்.
  • முரட், 2016 ஆம் ஆண்டில் மனிதக் கடத்தல்கலிலிருந்து மீண்டவர்களின் கண்ணியத்திற்கான ஐ.நா. அமைப்பின் முதலாவது நல்லிணக்கத் தூதராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
 

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்