TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டின் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசு

October 2 , 2018 2149 days 662 0
  • 2018 ஆம் ஆண்டின் உடலியல் அல்லது மருத்துவத்திற்கான நோபல் பரிசானது அமெரிக்காவைச் சேர்ந்த ஜேம்ஸ் அலிசன் மற்றும் ஜப்பானைச் சேர்ந்த தசுக்கூ ஹோஞ்சோ ஆகிய இரண்டு நோய் எதிர்ப்பியல் வல்லுநர்களுக்கு கூட்டாக வழங்கப்படுகிறது.
  • இது சுவீடனின் கரோலின்ஸ்கா மருத்துவ நிறுவனத்தில் நடைபெற்ற நோபல் பொதுச் சபைக் கூட்டத்தின்போது அறிவிக்கப்பட்டது.
  • நோய் எதிர்ப்புச் சக்தி தடை உடைப்பு சிகிச்சை முறையை கண்டறிந்ததற்காக இவர்கள் நோபல் பரிசினை வென்றுள்ளனர்.
  • நோயாளியின் சொந்த எதிர்ப்புத் திறனைக் கொண்டு புற்றுநோயை விரைவாக குணப்படுத்துவதை இந்த இரு அறிவியலாளர்களும் கண்டறிந்துள்ளனர்.
  • புற்றுநோய் செல்களை நேரடியாகத் தாக்கி அழிக்கும் பழங்கால சிகிச்சை முறையிலிருந்து இது வேறுபடுகிறது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்