2018 ஆம் ஆண்டிலிருந்து பதிவான சுய மரியாதைத் திருமணங்கள்
March 29 , 2025 4 days 43 0
2018 ஆம் ஆண்டிலிருந்து தமிழ்நாட்டில் 12,114 சுயமரியாதைத் திருமணங்கள் பதிவு செய்யப் பட்டுள்ளன.
Self-Respect Marriage என்றும் அழைக்கப்படும் சுயமரியாதைத் திருமணங்கள் ஆனது, பொதுவாக ஒரு புரோகிதர் முன்னிலையிலும் அல்லாமல் மற்றும் எந்தவொரு பாரம்பரிய திருமணச் சடங்குகளையும் பின்பற்றாமல் மேற்கொள்ளப்படுகின்றன.
சுய மரியாதைத் திருமணங்களின் பதிவு ஆனது, 1955 ஆம் ஆண்டு இந்து திருமணச் சட்டத்தின் 7 (a) பிரிவின் கீழ் வருகிறது.
7 (a) பிரிவானது 1967 ஆம் ஆண்டு தமிழ்நாடு திருத்தச் சட்டத்தினால் சேர்க்கப்பட்டது.