TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டில் இந்தியாவின் காலநிலை – IMD அறிக்கை

January 18 , 2019 2010 days 676 0
  • இந்திய வானிலை ஆய்வு நிறுவனம் (Indian Meteorological Department - IMD) சமீபத்தில் "2018 ஆம் ஆண்டின் போது இந்தியாவின் காலநிலை" என்ற தலைப்பிலான ஒரு அறிக்கையை வெளியிட்டு இருக்கின்றது.
  • இந்த அறிக்கையின்படி, இந்தியாவில் 2018 ஆம் ஆண்டானது 1901-ம் ஆண்டிலிருந்து 6வது வெப்பமான ஆண்டாகவும் உலகளவில் 4வது வெப்பமான ஆண்டாகவும் பதிவாகியுள்ளது.
  • இந்த அறிக்கை 2018-ம் ஆண்டின் போது இந்தியா முழுவதும் சராசரி வெப்பம் குறிப்பிடத்தக்க இயல்பை விட அதிகமாக இருந்தது என்று குறிப்பிடுகின்றது.
  • வருடாந்திர அளவில் சராசரியான தரைக் காற்றின் வெப்பம் இந்த ஆண்டில் (நாடு முழுவதும் சராசரியாக்கப்பட்டது) 1981-2010-ம் காலகட்டத்தின் சராசரியை விட 0.41°C அதிகம் ஆகும்.
  • வருடாந்திர சராசரியான வெப்பம் 1901-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை 100 வருடங்களுக்கு 0.6°C என்ற அளவில் அதிகரிக்கும் போக்கினை இது சுட்டிக் காட்டுகின்றது.
  • இந்தியாவில் பதிவான அனைத்து ஆறு வெப்பமான ஆண்டுகளும் கடந்த 10 வருடங்களில் பதிவானவையே ஆகும்.
  • 2018 ஆம் ஆண்டைப் பொறுத்த வரையில், இந்த ஆண்டின் குளிர் காலமானது 1901-ம் ஆண்டிலிருந்து ஐந்தாவது வெப்பமான பருவமாகும்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்