TNPSC Thervupettagam

2018 ஆம் ஆண்டு சியோல் அமைதி விருது

October 26 , 2018 2125 days 684 0
  • சியோல் அமைதி விருதுக்கான தேர்வுக் குழுவானது 2018 ஆம் ஆண்டின் சியோல் அமைதி விருதை பிரதமர் நரேந்திர மோடிக்கு வழங்க முடிவு செய்துள்ளது.
  • இவ்விருதைப் பெறும் 14-வது நபர் மோடி ஆவார். மேலும் இவ்விருது மோடிக்கு சியோல் அமைதி விருது பவுண்டேஷனால் வழங்கப்படவிருக்கிறது.
  • சர்வதேச ஒத்துழைப்பை மேம்படுத்துவதற்காக தன்னை அர்ப்பணித்தல், இந்திய மற்றும் உலகப் பொருளாதார வளர்ச்சியில் இவரது பங்கு ஆகியவற்றை அங்கீகரிக்கும் விதமாக மோடிக்கு இவ்விருது வழங்கப்பட்டுள்ளது.
  • மேலும் இவ்விருது “மோடிநோமிக்ஸ்” என்ற ஏழை மற்றும் பணக்காரர்களுக்கிடையேயான சமூக மற்றும் பொருளாதார இடைவெளியை குறைத்ததற்காகவும் வழங்கப்படுகிறது.
சியோல் அமைதி விருது
  • தென் கொரியாவில் சியோலில் நடைபெற்ற 24-வது ஒலிம்பிக் விளையாட்டுப் போட்டிகள் வெற்றி பெற்றதன் நினைவாக 1990-ஆம் ஆண்டில் சியோல் அமைதி விருது ஏற்படுத்தப்பட்டது.
  • கொரிய தீபகற்பம் மற்றும் உலகத்தில் உள்ள பிற பகுதிகளில் அமைதி ஏற்பட விரும்பும் கொரிய மக்களுக்காக இவ்விருது ஏற்படுத்தப்பட்டது.
  • மனிதவர்க்கத்தின் ஒற்றுமை, உலக நாடுகளுக்கிடையே அமைதிக்காக சமரசம் ஏற்படுத்துதல் ஆகியவற்றில் பங்களிப்பு ஏற்படுத்திய தனிப்பட்ட நபர்களுக்கு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை இவ்விருது வழங்கப்படுகிறது.
  • கடந்த காலங்களில் இவ்விருதைப் பெற்றுள்ளவர்களில் உலகப் புகழ்பெற்ற பிரபலங்கள் ஜெர்மனியின் ஏஞ்சலா மெர்க்கல், ஐ.நா.வின் முன்னாள் பொதுச் செயலாளர் கோபி அனான் உள்ளிட்டோரம் அடங்குவர்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்