நெதர்லாந்து நாட்டின் லெய்டென் நகரில் நடைபெற்ற கௌடென் ஸ்பைக் விளையாட்டுப் போட்டியில் (Gouden Spike meeting) ஆண்களுக்கான 10,000 மீட்டர் ஓட்டப் போட்டியில் இந்தியாவின் காவிட் முரளி குமார் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
குஜராத்தில் பிறந்து வளர்ந்த 21 வயதான காவிட் முரளி குமார் தனக்கான தனிப்பட்ட சிறந்த சாதனையாக (Personal best) இப்போட்டியில் தன் 10,000 மீட்டர் ஓட்டத்தை 28 நிமிடம் 34 நொடிகளில் கடந்தார். இதுவே நடப்பு சீசனில் இந்தியர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட சிறந்த சாதனையாகும். இந்தியர் ஒருவரால் மேற்கொள்ளப்பட்ட ஓர் இரண்டாவது வேகமான மற்றும் தூரமான ஓட்டப் பந்தய சாதனை இதுவாகும்.
2008 ஆம் ஆண்டு ஸ்பெயினின் விகோவில் நடைபெற்ற போட்டியில் சுரேந்திர சிங் தேசிய சாதனையாக 10,000 மீட்டர் ஓட்டத்தை 28 நிமிடம்89 நொடிகளில் கடந்தார்.
நெதர்லாந்து நாட்டில் நடைபெறும் முன்னணி தடகள விளையாட்டுப் போட்டிகளில் கௌடென் ஸ்பைக் விளையாட்டுப் போட்டியும் ஒன்றாகும்.