TNPSC Thervupettagam

2018 –டைம்ஸ் உயர்கல்வி வளரும் பொருளாதார நாடுகளின் பல்கலைக்கழகங்கள் தரவரிசை

May 18 , 2018 2257 days 645 0
  • அண்மையில் வெளியிடப்பட்டுள்ள 2018-ஆம் ஆண்டிற்கான டைம்ஸ் உயர்கல்வி வளரும் பொருளாதார நாடுகளினுடைய பல்கலைக்கழகங்களின் தரவரிசைப் பட்டியலில் (Times Higher Education Emerging Economies University Rankings 2018) இந்தியப் பல்கலைக்கழகங்கள் தங்களினுடைய தரவரிசைகளில் முன்னேற்றத்தைக் கண்டுள்ளன.

  • இந்த தரவரிசைப் பட்டியலில் முதல் 50 தரவரிசையுள் 4 இந்தியக் கல்வி நிறுவனங்கள் தரவரிசையினைப் பெற்றுள்ளன. முதல் 100 தரவரிசையுள் 8 இந்தியப் பல்கலைக்கழகங்கள் தரவரிசையினைப் பெற்றுள்ளன.
  • இந்த தரவரிசைப் பட்டியலில் பெங்களூருவில் அமைந்துள்ள இந்திய அறிவியல் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institute of Science-IISC) 13-வது இடத்திலும், மும்பையின் இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology -IIT) 26வது இடத்திலும், கரக்பூரில் அமைந்துள்ள இந்திய தொழில்நுட்பக் கழகம் (Indian Institute of Technology- IIT) 45 இடத்திலும் உள்ளது.
  • தொடர்ந்து ஐந்தாவது ஆண்டாக நடப்பாண்டின் டைம்ஸ் உயர்கல்வி வளரும் நாடுகளின் பல்கலைக்கழகங்கள் தரவரிசைப் பட்டியலில், சீனாவின் பெகிங் பல்கலைக்கழகமும் (Peking University) டிசிங்குவா பல்கலைக்கழகமும் (Tsinghua University) முதல் இரு இடங்களில் உள்ளன. மேலும் முதல் 10 இடங்களில் கூடுதலாக 5 சீனப் பல்கலைக்கழகங்கள் இடம் பெற்றுள்ளன.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்