TNPSC Thervupettagam

2018-ன் ஐந்தாவது பெரிய பொருளாதாரமுடைய நாடு

December 28 , 2017 2526 days 745 0
  • பிரிட்டனின் பொருளாதாரம் மற்றும் வணிக ஆராய்ச்சிக்கான மையத்தின் (Centre for Economics and Business Research) 2018-ஆம் ஆண்டிற்கான உலக பொருளாதார லீக் அட்டவணைப்படி  (World Economic league Table), 2018-ஆம் ஆண்டு பொருளாதார வல்லமையில் இங்கிலாந்து மற்றும் பிரான்ஸை விஞ்சி, உலகின் 5-வது பெரிய பொருளாதாரமுடைய நாடாக இந்தியா உயர உள்ளது.
  • இவ்வட்டவணையின் நடப்பாண்டிற்கான அறிவிப்பின் படி, ஏழாவது இடத்தில் உள்ள இந்தியா பொருளாதார வல்லமையில், அமெரிக்க டாலர்கள் மதிப்பின் அடிப்படையில் 2018ஆம் ஆண்டில் பிரான்ஸ் மற்றும் இங்கிலாந்தை பின் தள்ளி ஐந்தாவது பெரிய பொருளாதாரமுடைய நாடாகவும், 2032-ல் 3வது பெரிய பொருளாதார நாடாகவும் உயர உள்ளது.
  • மேலும் இவ்வட்டவணைப்பின் அறிவிப்பின் படி, 2032-ல் அமெரிக்காவை பின்னுக்குத் தள்ளி சீனா உலகின் மிகப்பெரிய பொருளாதாரமுடைய முதல் நாடாக உயர உள்ளது.
  • உலகச் சந்தையில் மலிவான ஆற்றலும், தொழிற்நுட்ப விலைகளுமே 2018-ல் உலக பொருளாதாரத்திற்கு ஊக்கமளிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • எரிபொருள் துறையின் மீது அதிகளாவிய சார்பையும், சர்வதேச எண்ணெய் சந்தையில் தன்னுடைய எண்ணெய் எரிபொருட்களுக்கு மிகக் குறைந்த சரக்கு விலையையும் (Low Oil commodity Price) கொண்டுள்ளதன் காரணமாக 2017-ல் 11வது பெரிய பொருளாதாரமுடைய நாடாக உள்ள இரஷ்யா 2032-ல் 17வது இடத்தை அடையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்