ஜெர்மன் நாட்டவரும், நடப்பில் ஸ்குடெரியா பெராரி (Scuderia Ferrari) நிறுவனத்தின் பார்முலா ஒன் கார் பந்தய ஓட்டுனருமான செபாஸ்டின் வெட்டல் ஆஸ்திரேலியா நாட்டின் மெல்போர்ன் நகரில் நடைபெற்ற 2018 ஆம் ஆண்டிற்கான பார்முலா ஒன் ஆஸ்திரேலியன் கிராண்ட் பிரிக்ஸ் பந்தயப் போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டத்தை வென்றுள்ளார்.
ரெட்புல் ரேசிங் நிறுவனத்தின் பந்தய வீரராக பங்கெடுத்து முறையே 2010, 2011, 2012, 2013 ஆம் ஆண்டுகளில் நான்கு முறை பார்முலா ஒன் உலக சாம்பியன்ஷிப் பட்டத்தை செபாஸ்டின் வெட்டல் வென்றுள்ளார்.