TNPSC Thervupettagam
April 23 , 2018 2310 days 810 0
  • 2017-ஆம் நாட்காட்டி வருடத்தின் (2017 calendar year) போது மேற்கொண்ட பணிகளுக்கான 2018 ஆம் ஆண்டின் புலிட்சர் பரிசுகள் (2018 Pulitzer Prizes) புலிட்சர் பரிசு வாரியத்தால் (Pulitzer Prize Board) வழங்கப்பட்டுள்ளன.
  • இதழியல் துறையில், நியூயார்க் டைம்ஸ் (New York Times) பத்திரிக்கை  மூன்று புலிட்சர் பரிசுகளை வென்றுள்ளது. இதனுடன் சேர்ந்து நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையானது இதுவரை    மொத்தம் 125 புலிட்சர் பரிசுகளை வென்றுள்ளது.
  • பொது சேவைப் பிரிவில் (Public Service category) தி நியூயார்க் டைம்ஸ் மற்றும் தி நியூ யார்க்கர் (The New Yorker) இதழ்கள் இணைந்து புலிட்சர் பரிசினை வென்றுள்ளன.
  • ஹாலிவுட் திரையுலகத்தில் திரைப்பட தயாரிப்பாளரான ஹார்வே வெயின் ஸ்டீனினுடைய (Harvey Weinstein) நீண்ட கால பாலியல் தொந்தரவுகள் மற்றும் பாலியல்  முறைகேடுகளை வெளிப்படுத்தியமைக்காக   புலிட்சர் பரிசு தி நியூயார்க் டைம்ஸ்  மற்றும் தி நியூயார்க்கர் இதழுக்கு  வழங்கப்பட்டுள்ளது.
  • இலக்கியம், நாடகம் மற்றும் இசைக்கான வகைப்பிரிவில் ஆண்ட்ரு சீன் கிரீர் (Andrew Sean Greer’s) எழுதிய  சித்திர  நாவலான லெஸ் (Less)  நாவல் சிறந்த புனைக்கதை விருதை (Fiction award)  வென்றுள்ளது.

இதழியல்

விருதுப் பிரிவுகள் விருதினைப் பெறுவோர்
பொதுச் சேவை தி நியூயார்க் டைம்ஸ்
புலனாய்வு அறிக்கை அளிப்பு தி  வாஷிங்டன் போஸ்ட்
உள்ளூர் அறிக்கை  அளிப்பு தி சின்சின்னடி என்குவைரர் ஸ்டாஃப்
சர்வதேச அறிக்கை ரியூட்டர் இதழின்  கிளேர் பால்டுவின்,  ஆண்டுரூ R.C மார்ஷல், மானுவெல் மோகாடோ
வர்ணனை அலபாமா ஊடக குழுவின் ஜான் ஆர்கிபால்டு
தலையங்கம் எழுதுதல் டெஸ் மொய்னஸ் ரிஜிஸ்டர் (Des Moines Register) இதழின் ஆண்டி டோமினிக்
முக்கியச் செய்திகளுக்கான புகைப்படம் டெய்லி புராகிரஸ் (Daily Progress) இதழின் ரியான் கெல்லி
முக்கியச் செய்திகளுக்கான  அறிக்கை அளிப்பு பிரஸ் டெமாகிரேட் இதழின் பணியாளர்கள்
விளக்க அறிக்கை அளிப்பு தி அரிசோனா ரிபப்ளிக் மற்றும் USA டுடே நெட்வோர்க்
தேசிய அறிக்கை அளிப்பு நியூயார்க் டைம்ஸ் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்
தனிச்சிறப்பு   இதழ் எழுதுதல் ராசெல் காட்ஸி கன்சா,  GQ இதழின் பகுதிநேரக் கட்டுரையாளர்
விமர்சனங்கள் நியூயார்க் இதழின் ஜெர்ரி சால்ட்ஸ்
தலையங்க கார்ட்டூன் வரைதல் நியூயார்க் டைம்ஸ் இதழின் பகுதி நேர கார்ட்டூன் ஓவியர்,மைக்கேல் ஸ்லோஹன், ஜேக் ஹால்பெர்ன், பகுதிநேர எழுத்தாளர்
தனிச் சிறப்பு புகைப்படக் கலை ரியூடர்ஸ் இதழின் புகைப்படப் பணியாளர்

இலக்கியம், நாடகம், இசை

விருதுப் பிரிவுகள் விருதினைப் பெற்றோர்
புனைக்கதை ஆண்ட்ரூ சீன் கிரீர் எழுதிய லெஸ் நாவல்
வரலாறு ஜாக் இ. டேவிஸ் எழுதிய “தி கல்ப்; தி மேக்கிங் ஆஃப் அன் அமெரிக்கன் சீ” (The Gulf: The Making of an American Sea)
கவிதை பிராங்க் பிடார்ட் எழுதிய ஹால்ப் லைட்-  சேகரிக்கப்பட்ட கவிதைகள் 1965 – 2016. (Half-light: Collected Poems 1965-2016)
இசை கென்ட்ரிக் லாமர்
நாடகம் மார்டியானா மஜோத்தின் -  காஸ்ட்  ஆஃப் லிவ்விங் நாடகம். (Cost of Living)
வாழ்க்கை வரலாறு அல்லது சுயசரிதை கரோலின் பிரேசர்  எழுதிய “பிரெய்ரி  பையர்ஸ்”, தி அமெரிக்கன் டிரீம்ஸ் ஆஃப் லௌரா இன்கால்ஸ் வில்டர்  (Prairie Fires: The American Dreams of Laura Ingalls Wilder)
கற்பனை அல்லாத  பொதுக்கதை பிரிவு (General Nonfiction) ஜேம்ஸ் பர்மான் ஜீனியர் எழுதிய லாக்கிங் அப் அவர் ஓன்; கிரைம் அன்ட் பனிஸ்மென்ட் இன் பிளேக்அமெரிக்கா. (Locking Up Our Own: Crime and Punishment in Black America)

புலிட்சர் பரிசு

  • அமெரிக்கன் – ஹங்கேரியன் பத்திரிக்கை பிரசுரிப்பாளரான ஜோசப் புலிட்சர் என்பவரால் 1917 ஆம் ஆண்டு புலிட்சர் பரிசுகள் தோற்றுக்கப்பட்டன.
  • அமெரிக்காவில் பத்திரிக்கைகள், இதழ்கள், ஆன்லைன் இதழ்கள், இலக்கியங்கள், இசை அமைப்புகளில் மேற்கொள்ளப்படும் சாதனைகளுக்கு வழங்கப்படும் மிக உயரிய வருடாந்திர விருதே புலிட்சர் பரிசாகும்.
  • நியூயார்க்கில் உள்ள கொலம்பியா பல்கலைக்கழகத்தினால் இந்த பரிசு நிர்வகிக்கப்படுகின்றது.
  • ஆண்டுதோறும் 21 வகைப்பாட்டின் கீழ் இந்த விருது வழங்கப்படுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்