TNPSC Thervupettagam
April 20 , 2018 2282 days 765 0
  • அமெரிக்காவின் மியாமி நகரில் நடைபெற்ற மியாமி ஒபன் போட்டியில் அமெரிக்க நாட்டைச் சேர்ந்த டென்னிஸ் வீரரான ஜான் இஸ்னெர் (John Isner)  ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த அலெக்ஸான்டர் ஜ்வெரேவ்-வினை (Alexander Zverev)  வீழ்த்தி முதல் முறையாக மியாமி ஒபன் பட்டத்தை வென்றுள்ளார்.
[caption id="attachment_15215" align="aligncenter" width="640"] JOHN ISNER (USA)
TENNIS - SHANGHAI ROLEX MASTERS - QI ZHONG TENNIS CENTER - MINHANG DISTRICT - SHANGHAI - CHINA - ATP 1000 - 2017
© TENNIS PHOTO NETWORK[/caption]
  • 2010 ஆம் ஆண்டில் இப்பட்டத்தைப் பெற்ற ஆண்டி ரோட்டிக்குப் பிறகு மியாமி ஒபன் பட்டத்தை வென்றுள்ள முதல் அமெரிக்க டென்னிஸ் வீரர் ஜான் இஸ்னெர் ஆவார்.

மியாமி ஒபன்

  • மியாமி மாஸ்டர்ஸ் (Miami Masters) எனவும் சில வேளைகளில் அழைக்கப்படுகின்ற மியாமி ஒபன் டென்னிஸ் (Miami Open)  போட்டியானது ஆண்கள் மற்றும் பெண்களுக்கான வருடாந்திர சர்வதேச டென்னிஸ் போட்டியாகும்.
  • தற்போது இப்போட்டியானது அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தின் கே பிஸ்கெய்ன் தீவில் நடைபெற்று வருகின்றது. இது மியாமி கடற்கரைக்கு அருகில் உள்ள ஓர் தீவு நகரமாகும்.
  • மியாமி ஒபன் போட்டியானது ஆண்டுதோறும் மார்ச் மாதம் நடைபெறுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்