TNPSC Thervupettagam
January 23 , 2019 2017 days 589 0
  • சர்வதேச கிரிக்கெட் குழுமமானது போட்டிகள் ஆண்டிற்கான அனைத்து வகை ஆட்டங்களுக்கும் முடிந்த பிறகு 2018 ஆம் ஆண்டிற்கான ஆண்களுக்கான விருதுகளை அறிவித்துள்ளது.
  • இந்திய அணியின் தலைவரான விராட் கோலி ஒரே காலண்டர் ஆண்டில் ICCஇன் ஆண்டிற்கான 3 முன்னணி தனி நபர் விருதுகளைப் பெறும் முதல் ஆட்டக்காரராகி வரலாறு படைத்துள்ளார்.
  • இவர் பெறும் விருதுகளாவன,
    • ICCஇன் ஆண்டின் சிறந்த கிரிக்கெட் வீரருக்கான சர் கேர்ஃபீல்ட் சோபர்ஸ் டிராபி (தொடர்ந்து இரண்டாவது முறையாக)
    • ICCஇன் ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் போட்டியின் ஆட்டக்காரர்
    • ICCஇன் ஆண்டிற்கான சிறந்த ஒருநாள் போட்டியின் ஆட்டக்காரர் (தொடர்ந்து இரண்டாவது முறையாக)
  • ஆண்டிற்கான சிறந்த டெஸ்ட் போட்டி ஆட்டக்காரர் விருதை இவர் முதன்முறையாகப் பெறுகிறார்.
  • மேலும் இவர் 2018 ஆம் ஆண்டிற்கான ஒரு நாள் போட்டி மற்றும் டெஸ்ட் போட்டிகளின் சிறந்த அணித் தலைவராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • விக்கெட் கீப்பர் மட்டையாளரான ரிஷப் பந்த் 2018-ல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் தனது சிறந்த பங்களிப்பிற்காக ICC-ன் ஆண்டிற்கான வளர்ந்து வரும் சிறந்த ஆட்டக்காரராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.
  • நியூசிலாந்து அணியின் தலைவரான கேன் வில்லியம்சன் ICC ஸ்பிரிட் ஆப் கிரிக்கெட் விருதினைப் பெற்றார். குமார் தர்மசேனா சிறந்த நடுவர் விருதினைப் பெற்றார்.
  • ஜிம்பாபே அணிக்கு எதிராக 76 பந்துகளில் 176 ஓட்டங்களை எடுத்த ஆரோன் பிஞ்ச் T20 போட்டியில் ஆண்டிற்கான சிறந்த செயல்பாட்டிற்கான விருதினைப் பெற்றார்.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்