அடுத்த ஆண்டிலிருந்து நாடெங்கிலும் உள்ள விமான நிலையங்களில் உடல் ஸ்கேன் கருவிகள் அமைக்கப்படவிருக்கின்றன.
நாடெங்கிலும் விமான நிலையங்களில் உள்ள முழு உடல் ஸ்கேன் கருவிகள் “மில்லிமீட்டர் அலை” (Millimetre Wave) இயந்திரங்கள் என்று அழைக்கப்படுகின்றன.
இது சந்தேகத்திற்கிடமான பொருள் இருக்கும் இடத்தை அசைவூட்டப் படத்தின் மூலம் குறிப்பிட்டுக் காட்டுவதற்காக பயணியின் மீது மின்காந்த அலைகளை செலுத்துகின்றது.
மேலும் விமானப் போக்குவரத்திற்கான பாதுகாப்பு அமைப்பானது (Bureau of Civil Aviation Security - BCAS) இந்த கருவிகளை அமைப்பதற்கான தொழில்நுட்ப விவரங்களைத் தரவிருக்கிறது. நாடெங்கிலும் எந்தெந்த விமான நிலையங்களில் இந்த கருவிகள் அமைக்கப்படும் என்றும் இது கூறவிருக்கிறது.