TNPSC Thervupettagam

2019 ஆம் ஆண்டில் எல்நினோ மீதான உலக வெப்பமயமாதலின் தாக்கம்

February 4 , 2019 1993 days 609 0
  • சமீபத்திய அறிக்கையின்படி மத்திய மற்றும் தென் அமெரிக்கப் பகுதிகளில் கொசுக்களால் பரப்பப்பட்ட நோய்கள் உட்பட உயிரிகளால் பரப்பப்படும் நோய்களின் அதிகரிப்பு ஏற்படக் காரணமாக எல்நினோ இருக்கலாம் எனக் கணிக்கப்பட்டிருக்கின்றது.
  • மேலும் தெற்கு ஆப்பிரிக்கா, இந்தியா, தென்கிழக்கு ஆசியா, ஆஸ்திரேலியா மற்றும் பசிபிக் தீவுகள் ஆகிய பகுதிகளையும் பாதிக்கின்ற  எல்நினோவால் உண்டாக்கப்பட்ட வறட்சியானது மிகப் பரவலானதாக இருக்கக் கூடும்.
  • எல்நினோ என்பது மேற்கு பசிபிக் பகுதியில் ஏற்படும் உயர் அழுத்தக் காற்றினாலும் கிழக்கு பசிபிக் பகுதியில் ஏற்படும் குறைந்த அழுத்தக் காற்றினாலும் உண்டாகும் ஒரு  பருவகால சுழற்சியாக வகைப்படுத்தப்பட்டிருக்கின்றது.
  • எல்நினோ ஒவ்வொரு 15 வருடங்களுக்கு ஒருமுறையும் ஏற்பட்டு பசிபிக் வெப்பமண்டலப் பகுதிகளில் கடுமையான வறட்சி, வெள்ளம், தூசிப் படலம் மற்றும் பனிப் பொழிவு ஆகியவற்றை ஏற்படுத்தி பொதுமக்களுக்கு லட்சக்கணக்கான டாலர்கள் அளவிற்குப் பொருளாதார நஷ்டத்தை ஏற்படுத்தி விடுகின்றது.

Leave a Reply

Your Comment is awaiting moderation.

Your email address will not be published. Required fields are marked *

பிரிவுகள்