2019 - 2020 ஆம் ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி
January 10 , 2020 1784 days 743 0
மத்தியப் புள்ளிவிவர அமைச்சகத்தின் தேசியப் புள்ளிவிவர அலுவலகமானது (National Statistical Office - NSO) தேசிய வருமானத்தின் முதலாவது முன்கூட்டிய மதிப்பீடுகளை வெளியிட்டுள்ளது.
இதன்படி, 2019 - 20 நிதியாண்டில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியானது 5% ஆக இருக்கும் என எதிர்பார்க்கப் படுகின்றது.இது கடந்த ஆண்டில் 6.8% ஆக இருந்தது.
முந்தைய ஆண்டில் 2.9% ஆக இருந்த விவசாயத் துறையின் வளர்ச்சி விகிதமானது இந்த ஆண்டில் 2.8% ஆக இருக்கும் என்று எதிர்பார்க்கப் படுகின்றது.
2019 - 20 ஆம் ஆண்டில் தனிநபர் வருமானத்தின் வளர்ச்சி விகிதமானது 4.3% ஆக இருக்கும் என மதிப்பிடப் பட்டுள்ளது.
இந்திய ரிசர்வ் வங்கியானது தனது அக்டோபர் மாதக் கொள்கையில் 2019-20 ஆம் ஆண்டிற்கான வளர்ச்சி விகிதத்தை 6.1 சதவீதமாக இருக்கும் என நிர்ணயித்திருந்தது. ஆனால் அது 2019 - 20 ஆம் ஆண்டிற்கான தனது டிசம்பர் மாதக் கொள்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சியை 5 சதவீதமாக மாற்றியமைத்துள்ளது.