17வது மக்களவையின் (2019 ஆம் ஆண்டு முதல் 2024 வரை) செயல்பாட்டுக் காலத்தில் மத்திய அரசினால் வெளியிடப்பட்ட பாராளுமன்ற உறுப்பினர்களின் உள்ளூர்ப் பகுதி மீதான மேம்பாட்டுத் திட்ட (MPLADS) நிதி சுமார் 4,510 கோடி ஆகும்.
இது முந்தைய மக்களவையில் வெளியிடப்பட்ட ஒரு நிதியை விட 65.2 சதவீதம் குறைவு ஆகும்.
14வது மக்களவையின் மொத்தக் காலக் கட்டத்தில், மத்திய அரசானது அனைத்துப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு 14,023 கோடி ரூபாயை வழங்கியது.
16வது மக்களவையின் காலக் கட்டத்தில் இந்த நிதியானது 12,945 கோடி ரூபாயாகக் குறைந்தது.
17வது மக்களவையில், கோவிட் பெருந்தொற்று காரணமாக இது மேலும் 4,510 கோடி ரூபாயாகக் குறைந்துள்ளது.
17வது மக்களவையின் காலக் கட்டத்தில், உத்தரப் பிரதேசம் (சுமார் 798 கோடி ரூபாய்), மகாராஷ்டிரா (360 கோடி ரூபாய்) மற்றும் மேற்கு வங்காளம் (339 கோடி ரூபாய்) ஆகிய மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் அதிக நிதியைப் பெற்றுள்ளனர்.
ஆனால், டெல்லி (45 கோடி ரூபாய்), ஹரியானா (81 கோடி ரூபாய்) மற்றும் பஞ்சாப் (111 கோடி ரூபாய்) போன்ற சில மாநிலங்களின் பாராளுமன்ற உறுப்பினர்கள் மத்திய அரசிடமிருந்து மிகக் குறைந்த நிதியைப் பெற்றனர்.
MPLADS நிதி என்பது ஓர் அரசுத் திட்டமாகும் என்ற ஒரு நிலைமையில் இதன் மூலம் இந்தியாவில் உள்ள ஒவ்வொரு பாராளுமன்ற உறுப்பினரும் ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் நிதியினைப் பெறுவர்.
1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்தத் திட்டம் ஆனது மத்திய அரசால் முழுமையாக நிதியளிக்கப்படுகிறது.