சமீபத்தில் விண்வெளி ஆராய்ச்சியாளர்கள் ஓர் அரிய விண்வெளிப் பொருளைக் கண்டுபிடித்துள்ளனர்.
இந்தப் பொருளானது குறுங்கோள் மற்றும் வால்மீன் ஆகியவற்றைப் போன்று காணப் படுகின்றது.
இந்தப் புதிய பொருள் ஒரு “செயல்படும் குறுங்கோள்” என்று அழைக்கப்படுகின்றது.
இந்தக் குறுங்கோள் “2019 LD2” என்று பெயரிடப் பட்டுள்ளது.
இது குறுங்கோளைப் போன்ற ஒரு சுற்றுவட்டப் பாதையையும் வால்மீனைப் போன்ற ஒரு வாலையும் கொண்டுள்ளது.
2019 LD2 ஆனது வியாழனின் சுற்றுவட்டப் பாதையைப் பகிர்ந்து கொள்கின்றது. இது “வியாழன் ட்ரோஜன்கள்” என்று அழைக்கப்படும் குறுங்கோள் திரளின் ஒரு பகுதியாகும்.
வால் நட்சத்திரத்தைப் போன்று வாயுவை உமிழும் ஒரு விண்வெளிப் பொருள் கண்டுபிடிக்கப் படுவது இதுவே முதல்முறையாகும்.
இந்தக் குறுங்கோளானது குறுங்கோள் நில அமைப்பு விளைவு இறுதி எச்சரிக்கை அமைப்பினால் (ATLAS - Asteroid Terrestrial-impact Last Alert System) கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.